புதன், 12 மே, 2021

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

Nellai siva
BBC :பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு வயது 69.கொரோனா பெருந்தொற்று காரணமாக சமீப காலங்களில் தமிழ்த்திரையுலகில் பிரபலங்களின் இறப்பு செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் விவேக், பாண்டு, இயக்குநர் கே.வி. ஆனந்த் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் கொரோனா தொற்றாலும், உடல்நலக்குறைவு காரணமாகவும் காலமாகினர்.
இந்த மரணங்கள் தந்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியாத நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா இன்று மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், பனங்குடி வீட்டில் காலமாகியுள்ளார்.
இயக்குநர் பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ திரைப்படம் மூலமாக நடிகராக திரையுலகில் அறிமுகமான நெல்லை சிவா, தனது தனித்துவமான நெல்லை பாணி பேச்சு வழக்குக்கு திரையுலகில் புகழ் பெற்றவர்
.‘வெற்றிக்கொடிகட்டு’, ‘திருப்பாச்சி’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது......
நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த ‘கிணத்த காணோம்’ காமெடி காட்சி மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ‘பரமபதம் விளையாட்டு’. சினிமா படங்களில் மட்டுமல்லாது சீரியல்களிலும் கவனம் செலுத்தினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..... இவரது எதிர்பாராத மரணத்திற்கு திரையுல கலைஞர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: