சனி, 15 மே, 2021

தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :   கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் (15.05.2021) அமலுக்கு வந்தன.
அதன்படி, காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் பிற்பகல் 12.00 மணிக்குப் பதில் காலை 10.00 மணிவரை மட்டுமே செயல்படும்.
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின் வணிக நிறுவனங்கள் மதியம் 02.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை செயல்படும்.
'DUNZO' போன்ற மின் வணிக நிறுவனங்கள் காலை 06.00 மணிமுதல் காலை 10.00 மணிவரை இயங்கலாம்.
மக்கள் கூடுவதைத் தடுக்க தமிழகத்தில் தேநீர் கடைகள் இயங்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.
தமிழகத்தில் ஏ.டி.எம். மையங்கள், பெட்ரோல், டீசல் பங்க்குகள் எப்போதும்போல செயல்படும்.
ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகளைத் திறக்க வழக்கம்போல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (17/05/2021) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ - பதிவு கட்டாயம். திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு, முதியோர் தேவை போன்றவற்றுக்கு இ - பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கும் இ - பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணிமுதல் காலை 04.00 மணிவரையிலான ஊரடங்கு அமலில் இருக்கும்.
 தமிழகத்தில் ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்கு மே 23ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.  

 

கருத்துகள் இல்லை: