சனி, 15 மே, 2021

கொரோனா உயிரிழப்புகளை அடுத்த ஒருமாதகாலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே திமுக அரசின் முதல் குறிக்கோள்.

May be an image of 1 person, standing and indoor

LR Jagadheesan  :    1. தமிழ்நாட்டு அரசின் கொரோனா war roomக்கும் Ambulance Service சேவைக்குமான தொலைபேசி சேவைகளில் தொடர்புகொள்ள முடிகிறதா? இரண்டு தொலைபேசி எண்களிலும் உண்மையான காத்திருப்பு நேரம் என்ன? உண்மையிலேயே இந்த இராண்டு சேவைகளை தொடர்புகொண்டவர்கள் அதனால் பலன்பெறரவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தங்கள் அனுபவங்களை கூறுங்கள். எனக்குத்தெரிந்தவர்களின் நேரடி அனுபவங்கள் அவ்வளவு உவப்பானவை அல்ல.
2. தலைநகர் சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முழுக்க ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில் அந்த தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை அரசுமருத்துவமனைகளுக்கு அனுப்பக்கூடாது என்று எச்சரித்த தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அந்த தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்ப எடுத்த முயற்சிகள் என்ன?


3. இன்றைய நிலையில் மாநிலத்தில் மருத்துவ ஆக்சிஜன் தேவையின் அளவென்ன? எவ்வளவு பற்றாக்குறை நிலவுகிறது? அது எப்போது தீரும்?
4. தமிழ்நாட்டின் மருத்துவ ஆக்சிஜனை கொடுக்கும் பொறுப்பு யாருடையது? அரசா? தனியார் மருத்துவமனைகளா? யார் இதற்கு முதன்மையான பொறுப்பு? அந்த பொறுப்பில் தவறினால் அவர்களுக்கு என்ன தண்டனை? ஆக்சிஜன் போதாமல் பாதிக்கப்பட்டு மனிதர்கள் உயிரிழந்தால் அதற்கு இழப்பீடு என்ன? யார் கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்?
5. தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் ஆக்சிஜன் போதாமை அல்லது மருத்துவ உபகரணங்களின் திடீர்கோளாறு காரணமாக உயிரிழந்த கோவிட் நோயாளிகள் எத்தனைபேர் என்பதை தேதிவாரியாக தனியார்/அரசு மருத்துவமனை விவரங்களோடு தமிழக அரசு வெளியிட்டுருக்கிறதா? ஏன் வெளியிடவில்லை? அல்லது ஏன் வெளியிடக்கூடாது?
6. அடுத்த ஒருமாதகாலத்துக்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொரோனா மரணத்துக்கும் கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து பொதுசுகாதாரத்துறையை சீரழித்த அதிமுக ஆட்சியும் அதில் இருந்த மிக மோசமான, மனிதாபிமானமே இல்லாத மகாப்பெரிய ஊழல்பேர்வழியான குட்கா பேர்வழியுமே முதன்மைக்காரணம். எனவே புதிய ஆட்சி இன்றைய சீரழிவை அதன் உண்மையான கொடுமைகளை உயிரிழப்புகளை உள்ளது உள்ளபடி சொல்வதே சரி. மூடிமறைப்பதோ மழுப்புவதோ உங்களுக்கு நீங்களே வெட்டிக்கொள்ளும் அரசியல் புதைகுழி.
7. கொரோனா உயிரிழப்புகளை அடுத்த ஒருமாதகாலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே திமுக அரசின் முதல் குறிக்கோள். அதில் அவர்கள் 100% கவனம் செலுத்துவதே சரி. ஆனால் அதேசமயம் இன்றையை சீரழிவை அதற்கான காரணிகளையும் காரணகர்த்தாக்களையும் நீங்கள் பொதுமக்களுக்கு உள்ளது உள்ளபடி அடையாளம் காட்டாவிட்டால் அவர்களின் அத்தனை அயோக்கியத்தனங்களின் மொத்த அரசியல் தண்டனைகளும் உங்கள் தலையில் தான் வந்து விடியும். எச்சரிப்பது கடமை. செவிமடுப்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை.

கருத்துகள் இல்லை: