சனி, 15 மே, 2021

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

 நக்கீரன் : தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் ஒரே நாளில் 6,581 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.


மே 17ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்கு உள்ளேயே பயணிக்க இ-பதிவு கட்டாயம்.
மின் வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி. அதேபோல் நாட்டு மருந்து கடைகள் திறக்க அனுமதி. பூ, காய்கறி, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும்  இல்லாமல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: