வெள்ளி, 14 மே, 2021

தமிழ் தேசியம் என்பது தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பண்டம் அல்ல

May be an image of 2 people

செல்லபுரம் வள்ளியம்மை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பல செய்திகளை கூறியிருக்கிறது.
தமிழ் தேசியம் என்பது தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பண்டம் அல்ல என்பது அழுத்தம் திருத்தமாக பதியப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டு நலனுக்கே முதலிடம் கொடுப்பார்கள் ,
இந்திய உபகண்ட நலம் என்பது கூட தமிழ்நாட்டு நலன்களுக்கு அப்பால்தான் என்பதை முதல் தடவையாக தமிழக வாக்காளர்கள் பிரகடன படுத்தி உள்ளார்கள்.
இனி வரும் காலங்களில் இந்த தேர்தல் தெளிவாக்கிய கருத்துக்கள் அடிப்படையில்தான் எந்த ஆய்வையும் மேற்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டு வாக்காளர்கள் பெரிய அளவில் ஒரு அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள் என்பதை இத்தேர்தல் காட்டியுள்ளது ..
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் திமுகவுக்கே மக்கள் முதலிடம் கொடுத்துள்ளார்கள்.


அதிலும் திமுகவுடன் இணைந்து களம்கண்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் மக்களால் ஆழமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது
இப்போது வெற்றி பெற்ற திமுக கூட்டணியின் செயல்பாடுகள்,
தமிழ்நாட்டின் எல்லா பெரிய அரசியல் கட்சிகளையும் எதிர்காலத்தில் இதே திசைக்கு முன்தள்ளி செல்லும் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன்
ஏனெனில் இதுதான் இனி தமிழ்நாடு செல்லும் பாதை என்பதை இந்த தேர்தல் திசை காட்டி உள்ளது.
இந்த திசையில் பயணிக்காத சக்திகள் காணாமல் போய்விடும்.
அடுத்த தேர்தலுக்குள் இன்றய அரசு பல முன்னேற்ற படிகளை தாண்டி இருக்கும்.
விரும்பியோ விரும்பாமலோ இதுதான் வழி என்ற முடிவுக்கு தமிழக வரலாறு வந்திருக்கும்! .
தமிழகத்தின் இந்த செய்தி இந்திய உபகண்டத்தை உலுக்கி இருக்கிறது
பொறுத்திருந்து பாருங்கள் ,
பன்னாட்டு பல்கலை கழகங்கள் இந்த தேர்தல் தந்த வரலாற்றை ஆய்வுசெய்யும்
திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயர் இன்னும் அதிகமாக உச்சரிக்கப்படும்!
 
 

கருத்துகள் இல்லை: