புதன், 12 மே, 2021

Sonu Sood என்னும் மாய பிம்பம்

May be an image of 1 person and text that says 'Producer files criminal complaint against Sonu Sood By Mumbai Mirror Vickey Lalwani Feb 9, 2013, 11:39 IST f P Next'
May be an image of 3 people, people standing and text

Bapeen Leo Joseph. : Sonu Sood  பஞ்சாப் மாநிலம் மோகா என்னும் இடத்தில் 1973ல் பிறந்தார்.
தந்தை சக்தி சாகர் சூட் ஒரு துணி வியாபாரி. தாயார் ஆசிரியை. மிக சாதாரண குடும்பத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
பஞ்சாபில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை நாக்பூர் Yeshwantrao Chavan College of Engineeringல் முடித்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே மாடலிங் செய்து வந்தார்.
1996ல் கல்லூரி காலத்தில் காதலித்த சொனாலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1999ல் கள்ளழகர் படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கு தமிழ் ஹிந்தி என நடித்து பெயர் பெற்றார்.
சிறிது சிறிதாக வளர்ந்து வந்த அவர் வாழ்க்கையை திருப்புமுனையாக்கும் நாள் 2009ல் அமைந்தது. தான் நாக்பூரில் படித்த Yeshwantrao Chavan College of Engineering இன் Alumni meetக்கு அந்த வருடம் சோனு சூடை அழைத்திருந்தனர்.
வழக்கமாக மந்தமாக செல்லும் Alumni விழா சினிமா பிரபலத்தின் வருகையால் களை கட்டியது. 

அந்த கல்லூரியின் நிறுவனர் திரு. Datta Meghe காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக அப்போது இருந்தார். Medical colleges, Engineering, Arts and science, pharmacy college என பல கல்லூரிகளை உள்ளடக்கிய Meghe group of Educational Institutions என்று மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்ஜியத்தை நாக்பூரில் நடத்தி வந்தனர். அவரின் இளைய மகன் Sameer Meghe தந்தையுடன் அரசியல் மற்றும் கல்லூரிகளை நிர்வகித்து வந்தார். பெரிய மகன் Sagar Meghe சிங்கப்பூரில் உள்ளார். சமீரும் சோனுவும் நெருங்கிய நண்பர்களாகினர்.
2010ல் சல்மான் கானுடன் நடித்த Dabaang திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது... பல ஹிந்தி பட வாய்ப்புகள் சோனுவுக்கு அமைந்தன. தான் சம்பாதித்த பணத்தில் கணக்கில் காட்டாமல் 30 கோடி ரூபாயில் மும்பையில் சொத்து வாங்கியதாக வந்த தகவலை அடுத்து டிசம்பர் 2012 ஆம் ஆண்டு சோனு வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. சமீர், தத்தா மேகே தலையீட்டில் நடவடிக்கை இன்றி கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2013ல் sheetal talwar என்ற தயாரிப்பாளர் சோனு தன்னிடம் சொத்து விஷயமாக 33 லட்ச ரூபாயை ஏமாற்றி விட்டதாக கூறி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிந்தார். அதுவும் மேகே குடும்ப தலையீட்டில் முடித்து வைக்கப்பட்டது. சமீருக்கு தனது கல்லூரியை புகழ் பெற வைக்கும் தனது ஆசையை சோனுவிடம் கூறினார். சோனு அப்போது நடித்து கொண்டிருந்த 'Shootout at Wadala' திரைப்பட தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசினார். படத்தின் ப்ரமோஷன் பொதுவாக 5 நட்சத்திர ஹோட்டலில் நடக்கும். அதை மாற்றி, அந்த படத்தின் ப்ரமோஷனை தனது YCCE கல்லூரியின் ஆடிடோரியத்தில் நடக்க வைத்தார். சோனு சூட், ஜான் ஆப்ரஹாம், அனில் கபூர் என நட்சத்திர பட்டாளம் கல்லூரியில் திரண்டது. மீடியா கவரேஜுடன் திருவிழா போல கூட்டம் களைகட்டியது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் தத்தா மேகே தனது மகன் சமீர் மேகேக்கு காங்கிரஸ் சார்பாக வர்தா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு பெற்றார். அப்போது நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் மோடி அலையின் காரணமாக சமீர் மோசமான தோல்வியை பெற்றார். தத்தா மேகேக்கு அரசியல் தாண்டி நித்தின் கட்கரியுடன் நீண்ட கால நெருங்கிய நட்பு இருந்து வந்தது. தோல்வியின் விரக்தியில் இருந்த அவரை கட்கரி சந்தித்து பாஜகவில் சேருமாறு அழைப்பு விடுத்தார். ஜூலை 5,2014 அன்று தத்தா மேகே தனது இரு மகன்களுடன் சென்று நித்தின் கட்கரி, தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
2016ல் சோனு தனது தந்தையின் பெயரில் சக்தி சாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி தனது மனைவியை தயாரிப்பளராக்கினார். தேவி என்று பிரபுதேவா நடித்து இயக்கிய தமிழ் படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கி 'Tutak Tutak Tutiya' என்று சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். படம் படுதோல்வி அடைந்து முதலுக்கே மோசமானது.. பண கஷ்டத்தில் சிக்கினார். சில சொத்துக்களை விற்று அதை சரிகட்டினார்.
2019இல் hingna தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சமீருக்கு இடம் கிடைத்தது. சமீர் தனது நட்சத்திர பேச்சாளராக சோனு சூடை களமிறக்கினார். அனல்பறக்க நடந்த பிரச்சாரத்துக்கு பின் சமீர் மாபெரும் வெற்றி பெற்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். சோனுவுக்கு அந்த தேர்தலுக்கு முன் மேகே குடும்பத்தின் மூலம் பாஜகவின் மேல்மட்ட தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நாட்களாக பஞ்சாபில் கால் பதிக்க தகுந்த துருப்பு சீட்டை தேடிகொண்டு இருந்த பாஜகவினருக்கு ஒரு மணி அடித்தது..
பஞ்சாபியர்கள் மதம் மற்றும் தொழில் இரண்டையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பவர்கள். வெறும் மதத்தை வைத்து அங்கு ஓட்டு வாங்கி விட முடியாது. படித்தவர்கள் அதிகம். பெரும் நிறுவனத்தில் வேலை, விவசாயம்,  தொழிலதிபர்கள் என்று பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் அதிகம் உள்ள ஊர். ஆகவே பஞ்சாப் மண்ணின் மைந்தனான சோனுவை சமூக வலைத்தளத்தில் மோடிக்கு 2013-14ல் குடுக்கப்பட்ட பிம்பங்களின் வகையையே பின்பற்ற டெல்லியில் ஆலோசனை செய்து நாக்பூரில் முடிவு செய்தனர்.
ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் உதவி செய்ய சோனுவுக்கு பணத்தை வாரி இறைத்தனர். சமூக வலைத்தளம் மூலம் கிடைக்கும் புகழை தொலைக்காட்சி, பத்திரிகை வாயிலாக மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வழி அமைக்கப்படுகிறது. அதன்படியே எல்லாம் நடக்க சோனு புகழின் உச்சிக்கு செல்கிறார்.
ஆனால் அவர்கள் நினைத்து பார்க்காத ஒன்று எதிர்பாரா விதமாக நடக்கிறது. விவசாய சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் வெடிக்கிறது. பஞ்சாப் விவசாயிகள் பெருமளவில் போராட்டத்தை நடத்துகின்றனர். சோனுவிடம் இது குறித்து பேட்டி காண்கையில், விவசாயிகள் தான் எல்லாமே அவர்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை என்று முடித்து கொள்கிறார். அடுத்தது கொரொனா வருகிறது. இதை வைத்து  இன்னும் பெயர் வாங்க பணம் இறைக்கப்படுகிறது.
முதல் முறை மத்திய அரசு முழு நாட்டுக்கும் லாக் டவுன் போடுகிறது. வெளி நாட்டில்  சிக்கிகொண்டு இருக்கும் தன் மாநில மக்கள மீட்டு கொண்டு வர அனுமதி மட்டும் தாருங்கள், மொத்த செலவயும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அசாம், ஜார்ஜ்கண்ட், கேரளா, தமிழ் நாடு போன்ற பல மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்... இது எதுக்கும் உள்துறை அமைச்சகம், சிவில் ஏவியேஷன் அமைச்சகம் ஒத்துக்கொண்டு அனுமதி வழங்கவில்லை... இந்த விஷயத்தில் கேரளா கோர்ட் வரைக்கும் சென்றது... ஆனால் எந்த பின்புலமும் இல்லை என்று சொல்லப்படும் ஒரு தனி மனிதன் சோனு சூடுக்கு 7 விமானங்கள் பறக்க மத்திய அரசு அனுமதி குடுக்கிறது, எந்த கேள்வியும் இல்லாமல்... பல நாடுகளில் இருந்து மக்களை கூட்டிக்கொண்டு வருவதை பத்திரிகைகள் விளம்பர படுத்துகின்றது....!!! இது போக வெளி மாநிலங்களில் சிக்கிய உள்ளூர் மக்களை சொந்த ஊருக்கு அனுப்ப பல மாநிலங்கள் மத்திய அரசிடம் சிறப்பு ரயிலுக்கு அனுமதி கேட்டவண்ணம் இருந்தனர். ஆனால் உள்துறை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் சோனுவிற்கு தனி ரயில்கள் ஒதுக்கி அனுமதி வழங்கினர்.. பஸ்களில் அனுப்ப சிறப்பு அனுமதியும் வழங்கினர். எந்த தடையும் இல்லை...
இதுவரை அவர் செய்த உதவிகளுக்கு தோராயமாக கணக்கிட்டால் நூறு கோடிகள் தாண்டும். ஆனால் ஆவருக்கு அவ்வளவு சொத்துக்கள் இல்லை.. ஒரு வேளை இருந்தாலும் குறுகிய காலத்தில் பணமாக்கியது எப்படி என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
வழக்கம் போல ஊடகங்கள் செய்தியை பரப்பி சோனுவுக்கு பெரும் புகழ் தேடி குடுத்த வண்ணம் இருந்தனர். செப்டம்பர்2020ல் சோனுவுக்கு Best Humanitarian award குடுக்கப்படுகிறது.
ஏப்ரல் 30 பஞ்சாப் தேர்தல் ஆணையராக திரு. Karuna Raju IAS (Batch 1998) நியமிக்கபடுகிறார்.
நவம்பர் 2020ல் பஞ்சாப் தேர்தல் ஆணையம் சோனு சூடை பஞ்சாபுக்கான சிறப்பு தூதுவராக நியமிப்பதாக அறிவிக்கிறார் பஞ்சாப் தேர்தல் ஆணையர். திரு கருணா ராஜூவின் மனைவி திருமதி. Anindita IAS ( Batch 2007) திருமணத்திற்கு பின் IAS ஆனவர்.  Anindita வின் குடும்பம் முழுவதும் நாக்பூரில் மருத்துவர்கள். அவரது தந்தை மறைந்த Dr.Indrajit Mitra, தாய் Dr. Shikha Mitra Nagpur medical gold medalist,  தாய் மாமா Dr. Dasgupta ,Nagpur Lata mangheswar hospital Dean(Rtd), Dr.Kajal Mitra(current Dean), Dr.Sajal Mitra,Nagpur medical college &Hospital Dean(VRS) இவர்கள் அனைவரும் தத்தா மேகேவின் குடும்பத்தினருக்கு மிக நெருக்கம். பல மருத்துவமனைகள் நடத்துவதால் மஹாராஷ்டிரா மருத்துவ கவுன்சில், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் நாக்பூர் கிளையில் மேகேவின் செல்வாக்கு அதிகம். அதன் மூலம் தான் பஞ்சாப் தேர்தல் அதிகாரி சோனுவை தூதுவராக நியமிக்கிறார்.
இதை அறிந்த சிவசேனா சோனுவின் மீது கண் வைக்கிறது.அனுமதி இல்லாமல் தனது ஆறு மாடி குடியிருப்பை ஹோட்டலாக மாற்றம் செய்துள்ளார். விஷயம் கேள்வி பட்ட மஹாராஷ்டிர அரசு அந்த பில்டிங்கிற்கு சீல் வைக்கிறது. மும்பை நீதிமன்றத்தில் மஹாராஷ்டிர அரசு சோனுவை 'Habitual offender' என்று affidavit ல் தாக்கல் செய்கிறது. தீர்ப்பு சோனுவுக்கு எதிராக வருகிறது. மீண்டும் மேகேவிடம் வருகிறார். பாஜக மேலிடத்தில் பேசி சோனு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார். கொரொனா காலத்திலும் வழக்கை உடனடியாக எடுத்து மும்பை தீர்ப்பை நிறுத்தி வைத்து சோனுவுக்கு சாதகமாக தீர்ப்பு. மஹாராஷ்டிர பாஜக இதை கொண்டாடி சிவசேனா அரசுக்கு கோர்ட்டு குடுத்த சாட்டையடி என்று பேட்டி குடுக்கிறது.
விவசாய போராட்டத்தால் பாஜகவிற்கு எதிரான அலை வீசுகிறது.
இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பஞ்சாப் தேர்தலில் சோனுவை முன்னிறுத்துவது வீணாகிவிடும் என்று மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாகவும், சோனுவை பஞ்சாப் மட்டுமில்லாமல் அரியானா, டெல்லி என்று மூன்று மாநிலத்திலும் முன்னிறுத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்று ஆலோசித்து வருவதாகவும் டெல்லி பறவை தகவல் தந்துள்ளது...
எதுவாகினும், அதுவரை ஏதோ ஒரு வழியில் மக்களுக்கு நன்மை கிடைக்கட்டும்... ஆனால் சில்லறை மட்டும் சிதற விட வேண்டாம்...!!!
Bapeen Leo Joseph.

கருத்துகள் இல்லை: