சனி, 15 மே, 2021

மராட்டிய மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலி

தினத்தந்தி : மும்பை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.
இந்த நோய் பாதிப்பு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது.
தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும்.
இந்தநிலையில் நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா தொடங்கிய கடந்த ஆண்டு முதல் இதுவரை மேற்கண்டவர்கள் பலியாகி உள்ளனர் எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: