வியாழன், 13 மே, 2021

திமுகவின் ஒவ்வொரு சிறப்பான ஆட்சிக்கு பின்பும் ஏன் தோல்வி அடைகிறது அல்லது மிதமான வெற்றியை மட்டுமே பெறுகிறது!

Sivakumar Nagarajan : திமுக ஆட்சிக்கு பின் ஒன்று திமுக படு தோல்வி

அடைகிறது அல்லது மிதமான தோல்வி அடைகிறது (1971 தேர்தல் தவிர). ஏனென்று பார்த்தால் ... ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
எங்கள் பள்ளியில் 11ம் வகுப்பு ஆரம்பித்து அமைதியாக போய்க்கொண்டிருந்தது...அதுவரை அறிவிக்கப் படாத ஒரே அறிவாளி கேங் என் தலைமையிலான 5 பேர் சிறு கூட்டம் தான்.
ஒரு மாதம் கழித்து ஒரு ஆசிரியரும் அவரது தம்பியும் பெங்களூரில் இருந்து வந்தார்கள்.
அந்த தம்பி ஒரு கல்லூரி பட்டம் பெற்றவன் என்று நாங்கள் நினைக்கையில் அவன் எனது வகுப்பில் மாணவனாக சேர்ந்தான்.
எங்களுக்கு ஆச்சரியம். அவனுக்கு தெரிந்த விஷயங்களில் 5% கூட எங்களில் யாருக்கும் தெரியவில்லை. எல்லா விதத்திலும் ரொம்பவே உயர்ந்த நிலையில் இருந்தான்.
பேசுறது பூரா இங்கிலீஷ் வேற. தமிழ் தெரிந்தாலும் ஆசிரியர்களிடம் மட்டும் தான் பேசுவான்.
தவிர உடல் அமைப்பு வேறு வித்தியாசம். அவன் அப்பவே 6 அடி இருந்தான். எங்களில் மற்றவர்கள் எல்லாம் 5 அடிதான் இருந்திருப்போம். தவிர ஆண்கள் பள்ளியாக இருந்தாலும் சனி, ஞாயிறுகளில் பார்வையாளர்கள் பள்ளி விடுதிக்கு வருவார்கள். பல பெண்களும் தான். இவர்களின் பார்வை எல்லாம் அந்த பையன் மேலயே இருக்கும். அவனுக்கு பணத்துக்கும் குறைவில்லை. அவனது அண்ணனே வாத்தியார் என்பதால்.
பொறாமையால் பொறுக்கவில்லை... அவன் மீதான சின்ன சின்ன தவறுகளை கூட ஊதிப் பெரிதாக்கி corres, rector எல்லாரிடமும் போட்டுத் தள்ளினோம். அவனது அண்ணன் ஓரளவு வரை தான் பொறுத்துப் பார்த்தார். முடியாமல் டிசி வாங்கி வேறு பள்ளிக்கு கூட்டிட்டு போயிட்டார்.
எல்லா விதத்திலும் மிகவும் உயர்ந்த மாணவன் ஒருவனை வெளியே வைத்துவிட்டோம் என்ற தெனாவட்டு இதர மாணவர்களின் தலைவனான எனக்கு சிறிது காலம் இருந்தது. பிறகு கல்லூரி எல்லாம் முடிந்தபிறகு அந்த சம்பவத்துக்காக வேதனைப் பட்டோம்.
திமுகவின் வேகமும் ஆளுமைத்திறனும் தமிழக மக்களுக்கு இன்னும் புரிபட வில்லை. அதுவும் இந்த அரசியல் புரிதலற்ற தலைமுறையினர் மத்தியில் இது சென்று சேரவில்லை.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கலைஞர் ஆட்சியிலேயே  2006-11 ஒரு மாபெரும் பொற்காலம். ஆனால் அந்த 5 ஆண்டுகளில் கலைஞர் தீட்டிய திட்டங்கள் ஒரு கல்லூரி ஆசிரியர் ஆரம்ப பள்ளியில் வகுப்பெடுப்பதைப் போல இருந்தது.
சமச்சீர் கல்வித் திட்டம்
ஒரு ரூபாய் அரிசி
உயர்கல்வி பள்ளி கல்வி அமைச்சகங்கள்
செம்மொழி மாநாடு
நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
தமிழ் ஒருங்குறி அறிமுகம்
தகவல் தொழில்நுட்ப கொள்கை
அண்ணா பல்கலைக்கழகத்தின் விரிவாக்கம்.
தமிழ்வழி பாடதிட்டங்கள்
புதிய மருத்துவக் கல்லூரிகள்.
இவை யாவையுமே இன்னமும் பல படித்தவர்களாலேயே புரிந்து கொள்ள இயலவில்லை.
8வயது பையனை உட்கார வைத்து குதிரை ஓட்டம் பழக்குவதைப் போல இருந்தது.
விளைவு கலைஞர் திட்டங்களை மிரட்சியோடு பார்க்க வைத்தது. இதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டன பார்ப்பன ஊடகங்கள்.. ஒவ்வொரு திட்டத்தையும் தவறான‌கண்ணோட்டத்தில் பேச வைத்து மூளைச் சலவை செய்தன.
போதாததற்கு சீமான் போன்ற இனத் துரோகிகள் வேறு.
இவை போன்றவை இனி நடக்காதிருக்க வேண்டும். அதே சமயத்தில் மக்களைத் திமுக ஆட்சியை புரிந்துகொள்ள சரியாக பயிற்றுவிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: