திங்கள், 1 மார்ச், 2021

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
maalaimalar : பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பாரிஸ் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
நிக்கோலஸ் சர்கோசி
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் இன்று அவருக்கு ஓராண்டு தடைவிதித்தது. மேலும், வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்க அவருக்கு உரிமை உண்டு என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.
சர்கோசிக்கு துணையாக செயல்பட்ட இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: