செவ்வாய், 2 மார்ச், 2021

மனோ கணேசன் (மலையக எம்பி ) பாஜக ஆதரவாளரா? சமூக வலைக்கு வந்த விவகாரம்

May be an image of 1 person, sitting, standing and ocean
Mano Ganesan MP
Mano Ganesan - மனோ  : "இந்திய தேசிய பாதுகாப்பு" என்பதை தனது வெளிநாட்டு கொள்கையில் மைய அம்சமாக, பிரதமர் இந்திரா கருதினார்.
இதேவிதமாகவே, இன்று பிரதமர் மோடியும் கருதி செயற்படுவதாக தெரிகிறது.
விசேடமாக, தனது தேசிய தென்முனை பாதுகாப்பு வலயத்துக்கு உள்ளே, "இலங்கை" வருவதாக,  மோடி அரசு இன்று நினைக்கினறது
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த, பாஜகவுக்கு தென்முனையில் இருக்கும் தமிழ்நாடு மிகவும் அவசியமாகின்றது.
இந்த பின்னணியிலேயே, தமிழக தேர்தலில், பிரதமர் மோடி, பாஜகவின் இரும்பு மனிதன் அமிட்ஷா ஆகியோர் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
அதிமுக, பாஜக, கூட்டணியில் சசிகலா கட்சியையும் உள்வாங்கி பலப்படுத்த பாஜக திட்டமிடுகிறது.
இவை எல்லாவற்றையும் முடிச்சு போட்டு, சில இடைவெளிகளையும் நிரப்பினால், பாக்கு நீரிணைக்கு அப்பால் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, இந்த பக்கம் இலங்கையின் ராஜபக்ச அரசுக்கு சந்தோஷத்தை தராது.
Nj Subash  : உங்களின் இந்த பதிவுகாமெடியின் உச்சம்
Mohammed Nafees  : பீஜேபியின் நாத்தம் இல்லாமல் இன்று வரை தமிழ்நாடு அதன் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் வருகையால் தமிழ்நாட்டின் புனிதம் நிச்சயம் கெட்டுவி
Velayuthapillai Sivaskantharajah
மோடிக்கு தமிழ்நாட்டில் கால்வைக்க வழி தேடுகிறார். தரைவழி பயணமே முடியாமல் உலங்கு வானூர்தியில் பயணித்தது நினைவிருக்கலாம். அதற்கும் வெளிநாட்டு கொள்கைக்கும் சம்பந்தம் இருக்குமா?

Nj Subash  :
அண்ணன் Mano Ganesan - மனோ  
அவர்களே.  பாசிச பாஜக-அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் வருவது இலங்கை அரசுக்கு நல்லது இல்லை என்று நேற்றைய உங்கள் பதிவில் பார்த்தேன். நான் பாசிச பாஜகவால் ஓட்டுமொத்த இந்தியாவும் படும்பாட்டை பார்ப்பவன் என்று முறையில் தங்களின் முக நூல் பதிவு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது. மேலும் இலங்கையில் அனைத்து இனங்களிடையேயும் ஒற்றுமையை விரும்பும் நீங்கள் எப்படி பாஜகவை ஆதிரிக்கிறீர்ககள் என்று தெரியவில்லை.ஒரு பக்கம் இனவாதம் ஓழியவேண்டும் என்று கூறிவிட்டு எப்படி பாஜகவை ஆதரிக்க முடிகிறது?

ராதா மனோகர் : திரு மனோ கணேசன் அவர்கள் அமித் ஷா ஒரு இரும்பு மனிதன் என்று  புகழ் பாடுவது ஏன் என்று விளக்கவேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் அதிமுக பாஜக ஆட்சி மீண்டும் ஏற்பட்டால் என்று கூறுகிறார் .ஏற்கனவே அந்த ஆட்சிதான் கடந்த ஒன்பது வருடங்களாக நடக்கிறது .
இதில் புதிதாக அவர்கள் ஆட்சிக்கு வருவதால் என்று நீட்டி இவர் நீட்டி முழங்குவது ஏன்?
எனக்கென்னனவோ திரு மனோ கணேசனின் பாஜக பாசம் இதில் கொஞ்சம் அம்பலப்படுகிறது என்றே தோன்றுகிறது.
அது சரி அமித் ஷாவின் குஜராத் கொலைகள் மற்றும் காஷ்மீர் உரிமைகள் பறிப்பு போன்ற எத்தனையோ கொடூரங்களை எண்ணித்தான் அவரை ஒரு இரும்பு மனிதன் என்று போற்றுகிறார்போலும்.
திரு மனோ கணேசன் எவ்வளவு தவறான கணிப்பிலும் தவறான கொள்கையிலும் உள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு கதாநாயகன் தனது பிம்பத்தை தொலைக்கிறார் என்று கருத தோன்றுகிறது. . 

கருத்துகள் இல்லை: