சனி, 6 மார்ச், 2021

திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவு... மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடம் நேர்காணல்

  Vigneshkumar - tamil.oneindia.com :  சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நடைபெறும் வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்காக பல்வேறு கட்சி தலைவர்களும் மேற்கொண்டிருந்த சுறாவளி பிரச்சாரத்திற்கு இந்த தேர்தல் ப்ரேக் போட்டது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் வெள்ளிகிழமை தொடங்குகிறது. இதனால் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
அதிமுக கூட்டணி அதேபோல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளிலும் அனைத்துக் கட்சியினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேற்று முன்தினம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரைக் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணி மறுபுறம் திமுக தரப்பில் இந்திய கம்யூனிஸ்ட் (6 தொகுதிகள்), விசிக (6 தொகுதிகள்), இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (3 தொகுதிகள்), மமக (2 தொகுதிகள்) ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் திமுக கறாரக உள்ளதால் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்குடன் கூட்டணி தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை.

ஸ்டாலின், உதயநிதி நேர்காணல் கடந்த சில நாட்களாகவே திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வந்தது. அந்த நேர்காணல் இன்றுடன் நிறைவடைகிறது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. அதேபோல சேப்பாக்கம் - திருவெல்லிக்கேனி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த உதயநிதியிடமும் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

உதயநிதி போட்டியிடவில்லை? முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என்று தகவல் பரவியது. ஆனால், இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தவறான தகவல் என்றும் அதேநேரம் அவருக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை: