புதன், 3 மார்ச், 2021

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரம்... பெயர்த்து எடுக்கப்பட்ட சம்பவம்.. வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது

Vigneshkumar - tamil.oneindia.com : திருப்பூர்: கூலிபாளையம் அருகே வங்கி ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் வடமாநில இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூரை அடுத்துள்ள கூலிபாளையத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கடந்த 22 ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர் அடியோடி பெயர்த்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக வங்கி கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல், ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி அப்படியே அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.                 ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

நேற்று பெருந்துறையில் பணம் கொள்ளையடிக்கப்ட்ட நிலையில் உடைந்திருந்த ஏடிஎம் இயந்திரம் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வடமாநில இளைஞர்கள் 6 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.... கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து 69 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஊத்துக்குளி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள வடமாநில இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை: