வெள்ளி, 5 மார்ச், 2021

மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு சிவசேனா ஆதரவு . மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தம் தாக்கரே அறிவிப்பு

 

Rayar Anthony -tamil.oneindia.com​ : கொல்கத்தா: பாஜகவின் நீண்டநாள் நண்பனாக இருந்து எதிரியாக மாறிய சிவசேனா, வருகிற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
மம்தா தீதி(அக்கா) ஒரு கர்ஜிக்கிற வெற்றி பெற நாங்கள் விரும்புகிறோம். மம்தா பானர்ஜிதான் வங்காளத்தின் உண்மையான புலி என்று சிவசேனாவின் சஞ்சய் ரவுத் கூறினார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக-திரிணாமுல் இடையே போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
தமிழகத்தைப்போல் மேற்கு வங்க தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. அங்கு இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் சபதம்.
இதற்கு பல முன்பே திட்டம் வகுத்து விட்டார் அமித்ஷா. இதற்காக திரிணாமுல் கட்சியின் கூடாரத்தில் இருந்து ஒவ்வொருவராக பாஜக பக்கம் கொண்டு வந்தார். மம்தாவின் வலது கரமாக விளங்கிய சுவேந்து அதிகாரி உள்பட பல மூத்த தலைவர்கள் அமித்ஷா சொல் கேட்கும் கிளிப்பிள்ளையாக அப்படியே பாஜக பக்கம் ஒதுங்கினர்.
தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என்று மொத்த பாஜக அணியே மேற்கு வங்கத்தில் வலம் வந்தது. ஆனால் தான் எதற்கும் சளைத்தளவர் அல்ல என்பதை மம்தா நிரூபித்தார்.
பாஜகவுக்கு எதிராகவும், தனது கட்சியில் இருந்து சென்றவர்களுக்கு எதிராகவும் வீறு கொண்டு முழங்கினார் மம்தா. கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மற்றும் சில பிரபல பெங்காலி நடிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டார். இவ்வாறு பாஜக-திரிணாமுல் இடையே போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
திரிணாமுலுக்கு சிவசேனா ஆதரவு இந்த நிலையில் பாஜகவின் நீண்டநாள் நண்பனாக இருந்து எதிரியாக மாறிய சிவசேனா, வருகிற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கூறியதாவது:- மேற்கு வங்கத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க உள்ளோம்.


உண்மையான வங்காள புலி இந்த முறை தீதி(அக்கா) Vs அனைவருக்குமான சண்டையாகத் தோன்றுவதை எதிர்த்துப் போட்டியிடப் போவதில்லை. மம்தா தீதி(அக்கா) ஒரு கர்ஜிக்கிற வெற்றி பெற நாங்கள் விரும்புகிறோம். மம்தா பாணர்ஜிதான் வங்காளத்தின் உண்மையான புலி என்று சஞ்சய் ரவுத் கூறினார். சிவசேனா ஆதரவு தெரிவித்து இருப்பது மூலம் திரிணாமுல் காங்கிஸ் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துளளது


கருத்துகள் இல்லை: