ஞாயிறு, 27 டிசம்பர், 2020

சிங்கப்பூரில் செயற்கை இறைச்சியை உருவாக்கும் முயற்சி வெற்றி! .Singapore approves sale of lab-grown chicken meat

Image may contain: food, text that says 'NEWS UPDATE SUN !NEWS செயற்கை கோழி இறைச்சிக்கு சிங்கப்பூரில் அனுமதி உலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூரில் முழுவதும் ஆய்வகத்திலேயே வளர்க்கப்பட்ட சிக்கன் விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Eat Just நிறுவனம், ஆய்வகத்தில் கோழியின் செல்களைக் கொண்டு செயற்கையாக இந்த இறைச்சியை தயாரிக்கிறது. SUNNEWSTAMIL SUNNEWS 27-DEC-20'

Devi Somasundaram : · நான் 2018 லயே எழுதி இருந்தேன்..மனிதன் தன் முழு பரிணாமத்தை எட்டவே இல்லை என்று..மனிதனுக்கு 6 வது அறிவு ஏன் தரப்பட்டது .அது இயந்திரங்களையோ அணுகுண்டுகளையோ தயாரிப்பதற்காக தரப்படவில்லை.. இந்த பூமியில் தோன்றிய அனைத்து உயிர்களுக்குமான உணவு அவை தோன்றும் போதே அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. செடி, தழைகள் ஆடு, மாடுகளுக்கானது ..கேரட் முயலுகானது .ஆப்பிள் பாண்டாகரடிகளுக்கானது ..இப்படி ஒவ்வொரு உயிரினமும் அதன் உணவோடவே தோன்றியுள்ளது . மனிதனுகான உணவு எது ? ..மனிதனுக்கு எந்த உணவும் அடையாளப்படுத்தப்படவில்லை ..ஆப்பிளை நாம் கரடியிடம் இருந்து திருடி தின்கிறோம்..அதன் உணவை நாம் தின்றுவிட்டால் அது உணவு இல்லாமல் அழிந்துவிடும் .
அப்ப மனிதனுக்கு எதுதான் உணவு ? ...மனிதன் தன் உணவை தானே உருவாக்க வேண்டும்..இது வரை நாம் உணவை உருவாக்கவே இல்லை ..இறைச்சியை உருவாக்கச்சொன்னால் கோழியின் பிய்ந்த இறக்கை, உரித்ததோல் என்று குப்பையை தான் உருவாக்கினோம்..
இறைச்சி அந்த குப்பைகளுகுள் ஏற்கனவே இருந்தது தான். நாம் உருவாக்கியது குப்பை மட்டுமே .
தற்பொழுது சிங்கப்பூரில் இறைச்சியை லேபில் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் ...இப்பொழுது தான் மனிதன் தன் முழு பரிணாமத்தை எட்டியுள்ளான்..
இனி நம் உணவு சோதனை சாலைகளில் உருவாகும் காலம் விரைவில் வரலாம் .
என்ன ஒரு பிரச்சினை என்றால் ..லேபில் உருவானதால் இது சைவமா அசைவமா என்பதில் அந்த கோழி கொக்கரக்கோனு கத்தல அதனால சைவமாக்கப்படலாம்..
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற இடத்தில் இந்த சைவ ,அசைவ கான்செப்ட் காலாவதி ஆகிவிடுகிறது என்பது வேறு விஷயம்.

கருத்துகள் இல்லை: