திங்கள், 28 டிசம்பர், 2020

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்... உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள்

Kamala Sivanraj - ஆறாம் அறிவு : கரையான் எறும்பு தேன் ஈ இது இல்லை என்றால் மனிதன் வாழவே முடியாது.. கரையான் புற்றில் பாம்பு கடவுள் வாழ்கிறான் என்று கயவரகளின் ஏமாற்று 

இதே உண்மையின் ஆராய்ச்சி கட்டுரை.. பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள் கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.   கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர்.                    அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.  கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைந்த தாவரவியல், நில அமைப்பு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

கரையான்கள் அதிக ஈரப்பதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.கரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மண்ணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், ‘ஒரே மாதிரி ‘ என்று பொருள். Ptera என்றால், ‘இறக்கை ‘ என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் பெயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.
கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும்.
இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.
இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும். இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றல் என்று நினைக்குக் போது வியப்பாகவே இருக்கிறது
ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்றிற்க்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.
பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.
இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயம்.
இப்படிக்கு
கமலாசிவன்ராஜ்

கருத்துகள் இல்லை: