திங்கள், 28 டிசம்பர், 2020

பங்களாதேஷ் இந்தோனிஷியா போன்ற முஸ்லீம் நாடுகளில் தாய்மொழியில்தான் பெயர்கள் ... பகுத்தறிவு பரிதாபங்கள். Part 2

Image may contain: 3 people, text that says 'பிரியாணி பந்தியில் மட்டுமே இஸ்லாத்தை நுகர்ந்த தோழர் மதிமாறன்கள் பார்வைக்கு.... Paava Kadhaigal Kadh'
Saadiq Samad Saadiq Samad : சில இஸ்லாமிய" அறிவு சீவிகள்" அதெல்லாம்கிடையாது, அப்படி வர தேவையில்லை, குரான் ஹதீஸ் கள் தான் அடிப்படை என்பார்கள். குரான் ஹதீஸ்கள் போதும் என்றாலும், மேற்கூறிய அனைத்து பிரிவிலும் இந்த குரான் ஹதீஸ்கள்தான் கோலோச்சுகிறது. முஹம்மதே குரைஷி என்ற உயர் சாதியிலிருந்து வந்தவர்தான். குரானே உங்களை குலம் கோத்திரமாக பிரித்தோம் என்கிறது. அதன் நீட்சியே இஸ்லாத்தின் எண்ணற்ற பிரிவுகளுக்கான காரணம். ஒருவேளை சாதி இல்லாத இஸ்லாமியராக ஒருவரால் மாற முடியும் என்றால், அப்படி மாறுவது போல் இந்துவாகவும் ஒரு பெண்ணால் மாறமுடியும், வாழ முடியும். அவள் மனம் எந்த கடவுள்களை ஏற்கிறது வணங்குகிறது என்பதை பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. இதில் ஹிந்து மத நிர்பந்தம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை."
//நியாயப்படி இந்த கதையில் ஹிந்துவாக இருக்கக்கூடிய சரவணன் இஸ்லாமியராக மாறியிருக்க வேண்டும். ஆனால் மதமாற்றம் பிடிக்காது இயக்குனர் சரவணனை மதம் மாற விடாமல் சரவணனாகவே காட்டுகிறார். இங்குதான் இயக்குனரின் நுட்பம் இருக்கிறது//
"இஸ்லாமிய மதங்களின் நுட்பம் புரியாமல் மதிகெட்டு மதிமாறன் பேசுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காகவே ஒரு ஹிந்து இஸ்லாமியராக மாறியே ஆகவேண்டும் என்ற என்ன கட்டாயம் இருக்கிறது ?சரவணன் ஹிந்துவாகவே இருக்கட்டும். சரவணனுக்கு கத்னா செய்யவேண்டும் என்ற மதி மாறனின் உள் நோக்கம் மிக அருவருப்பானது சரவணன் இந்துவாக வாழ்வதில் மதிமாறன் அவர்களுக்கு என்ன வருத்ததம்? ஹிந்தும் முஸ்லீமும் சேர்ந்து வாழவே கூடாது என்கிறாரா?
தன்னை சமூக மாற்ற சிந்தனையாளராக, சாதி, மதம் கடவுள் போன்றவற்றை எதிர்ப்பவாராக காண்பித்துக் கொள்ளும் மதிமாறன் போன்றவர்கள் இஸ்லாமிய, கிருஸ்தவ மதங்களுக்கு ஆள்பிடிக்கும் முகவர்களைப்போல் பேசுவது வேடிக்கையானது. ஒரு இஸ்லாமியப் பெண் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களுடன் திருமண உறவில் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தும் இஸ்லாமிய ஷரியாவின் குரலாக மதிமாறன் ஒலிப்பது தற்செயலானதுதா? திட்டமிட்டப்பட்டதா?
//திரைப்படத்தில் அடுத்ததாக ஹிந்து ஆணுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் என்ற சர்ச்சை எழுகிறது. அதில் அந்த பெண் தன் மாமனார் மாமியாரிடம் கலந்தாலோசித்து வைப்பதாக கூறுகிறார். இங்குதான் இயக்குனரின் நுட்பமான உளவியலை கவனிக்க வேண்டும். கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு ஹிந்து மாமனார் மாமியார் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கச் சொல்வார்கள் ? ஹிந்து பெயரைத்தான் வைக்கச் சொல்வார்கள் .அதாவது ஒரு இஸ்லாமியப் பெண்ணே தன்னுடைய பிள்ளைக்கு ஹிந்து பெயரை வைத்து இந்துவாக வளர்க்கலாம் என்று கூறுவது போல் காட்சி அமைத்திருக்கிறார்//
இயக்குனர் மிக நுட்பமாகத்தான் அந்த காட்சியை அமைத்திருக்கிறார். ஆனால், அந்த நுட்பத்தை உணரும் 'மதி' தோழர் மதிமாறனுக்கு இல்லாததனால்தான் இதுபோன்று அபத்தமாக காட்சிகளை புரிந்து கொள்கிறார். என்னதான் ஒரு பெண் மதம் மாறாமல் தன்னுடைய கொள்கையிலேயே வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு பிறக்கக் கூடிய குழந்தைக்கு எந்த மாதிரியான சூழலில் வளர்ப்பது எந்த மாதிரியான பெயரை வைப்பது என்பது போன்ற சமயங்களில் பொதுவாக பெண் பலவீனமானவராக கையறு நிலையில் ஆகிவிடுகிறார் என்பதையும், பொதுவாக பெண் தன் கணவன் சார்ந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே தன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது எனும் சமூக அவலத்தையும்தான் இந்த காட்சி அமைப்பு மூலம் இயக்குனர் உணர்த்த விரும்பியதாகவே கருத முடிகிறது.
 
மேலும் ஒரு இஸ்லாமியருக்கு முருகன் என்ற பெயர் வைக்கக்கூடாது என்று எந்த இஸ்லாமிய புத்தகங்களிலாவது கூறப்பட்டிருக்கிறதா ? முருகன் என்றால் அழகு ,இளமை என்று பொருள். அந்தப் பெயர் இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரான பெயரல்ல. முருகன் எந்த கொள்கையில் இருக்கிறார் என்பதுதான் அவர் யார் என்பதை தீர்மானிக்கிறது. முருகன் என்பதை ஏன் வெறும் ஒரு ஹிந்து பெயராக மட்டுமே கட்டமைக்க வேண்டும். அதை ஒரு தமிழ் பெயராகவும் பார்க்கலாம். எதற்காக தமிழகத்தில் தமிழ் பேசி வாழும் ஒரு இஸ்லாமியர் அரபி மொழியில் முபாரக் என்ற பெயரை வைக்க வேண்டும் ? இஸ்லாமிய அடிப்படை நூல்கள் எதுவும் தங்கள் குழந்தைகளுக்கு அரபியில் மட்டும் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எங்கேயும் கட்டாயப்படுத்தாத நிலையில், தாய்மொழி எதுவாக இருப்பினும் அரபி பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும், புரிதல்ற்று இஸ்லாமியர்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை எதற்காக ஊக்குவிக்க வேண்டும் ? 
பங்களாதேஷ் இந்தோனிஷியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் அந்தந்த மொழியில் பெயர் வைத்துள்ளார்கள் 
மதி மாறன் வகையறாக்கள் பிரியாணி பந்தியில் மட்டுமே இஸ்லாத்தை நுகர்ந்ததால் வந்த வினை இது. இப்படிப்பட்ட சிலீப்பர் செல்களால்தான் ஹிந்துதுவாக்கள் வளர்ந்து வருகிறார்கள்"
//சத்தார் என்கிற திருநங்கை உயிருக்கு போராடும் நிலையிலும் அவரது இஸ்லாமிய குடும்பம் அவரை புறக்கணிக்கிறது. இதிலிருந்து இஸ்லாமியர்கள் திருநங்கைகளை புறக்கணிக்கிறார்கள் என்று நிறுவ முயல்கிறது. ஆனால், இஸ்லாமியர்கள் திருநங்கைகளை புறக்கணிப்பதே இல்லை. திருநங்கைகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களாக நினைத்து பழகி வருபவர்கள் இஸ்லாமியர்கள்//
"மதிமாறன் அவர்களின் இத்திரைப்படத்தின் மீதான மாற்றுக் கருத்திற்கான அடிப்படைக் காரணம் இநதக் காட்சியமைப்பில்தான் ஒளிந்திருக்கிறது. எல்லா மதங்களிலும் திருநங்கைகளை ஏற்பவர்களும் இருக்கிறார்கள் புறக்கணிப்பவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விதிவிலக்கல்ல. இதே காட்சியில் ஒரு ஹிந்து திருநங்கையை அவரது குடும்பத்தார் புறக்கணிப்பதாக காட்டினால் ஒட்டுமொத்த இந்து சமூகமே திருநங்கையை புறக்கணிக்கிறார்கள் என்று இந்து மதத்தை ஆதரிக்கும் ஏதாவது மதிகெட்டவர்கள் கூறுவார்களே அப்போது என்ன செய்வது? ஒரு இஸ்லாமிய குடும்பம் அல்லது ஒரு ஊரில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் திருநங்கையை புறக்கணிக்கிறார்கள் என்றால் அது இங்குள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் அப்படித்தான் செய்கிறது என்று பொருள் ஆகாது. அப்படித்தான் அதை பொருள் படுத்துகிறோம் என்றால் எவ்வித காட்சிகளையும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் வைத்து எடுக்க முடியாது.
இஸ்லாமியர்கள் திருநங்கைகளை புறக்கணிக்கிறார்களா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் திருநங்கைகளின் விஷயத்தில் இஸ்லாமிய நிலைப்பாடு என்ன என்று ஆராய்ந்திருக்கிறீர்களா ?
முஸ்லிம் திரு நங்கைகளுக்கு மஸ்ஜீத்களில் இமாமாக பணியாற்ற முடியுமா? அவர்களுக்கு இஸ்லாமிய மதரஸாக்களில் இடமுண்டா?
இஸ்லாமிய கற்பனை கதைகளான நபிமார்கள் கதைகளில் எந்த திருநங்கைகளும் நபிகளாக இருந்ததில்லை. எந்த திருநங்கைகளும் மிக முக்கியமான ஸ்தானத்தை பிடித்ததும் இல்லை. வழிபாடு இறைத்தூதர்கள் கதைக்கூட விட்டு விடுவோம் சராசரி திருநங்கைகளின் வாழ்க்கைக்கு வருவோம் இஸ்லாத்தின் திருமணம் என்பது நபி வழி எங்காவது ஒரு முஸ்லிம் திரு நங்கைக்கு நிக்காஹ் செய்யப்பட்டு இருக்கிறதா? திருநங்கைகள் மீது இஸ்லாம் கடும்போக்கை கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.ஆனால் ஹிந்து மதம் கூட சற்று மாறுபட்டு திருநங்கைகளையும் இந்த சமூகத்தில் ஒருவராக நினைத்து அவர்களது புராண கதைகளில் கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார்கள். மேலும் ஹிந்துக்கள் ஒரு படி மேலே போய் திருநங்கைகள் கடவுளின் ஆசி பெற்றவர்களாக நினைத்து அவர்களிடம் ஆசி வாங்கி அவர்களை கௌரவப்படுத்தும் செயல்கள் கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது. திரு நங்கைகளுக்கு வழிபாடு கோவில் உண்டு. கூத்தாண்டவர் என்ற வழிபாடும் உண்டு. எவ்வகையிலும் இஸ்லாமியர்களை விட தரம் தாழ்ந்து ஹிந்துக்கள் திருநங்கைகளை நடத்துவதில்லை.
பொதுவாகவே மனிதர்கள் உருவங்களை மாற்றியமைத்துக் கொள்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. உதாரணத்திற்கு, பல் வரிசையை சரி செய்வது போன்ற உருவ சீரமைப்புகளுக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது. புருவங்களைத் திருத்திக் கொள்வது விரும்பிய உருவங்களை உடலில் பச்சை குத்திக் கொள்வது போன்ற அற்ப விஷயங்களைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அவ்வளவு ஏன்? பெண்கள் பொய்முடிகளை வைத்து கொள்வதும், உதட்டுச் சாயம் பூசிக் கொள்வதும் கூட இஸ்லாம் வன்மையாக் கண்டிக்கிறது, அப்படிப்பட்டவர்களை விபச்சாரிகள் என்கிறது இஸ்லாம். இந்நிலையில் தன்னை பெண்ணாக உருவகப் படுத்திக் கொள்ளும் ஒரு ஆண் திருநங்கைகள் அறுவைச் சிகிச்சை செய்து தங்களை முழுமையாக பெண்களாக மாற்றிக் கொள்வதை இஸ்லாம் எப்படி அனுமதிக்கும்?
திருநங்கைகளை இஸ்லாம் ஏற்பதில்லை. அவர்களை வீடுகளிலிருந்து அடித்து விரட்டியடிக்க வலியுறுத்துகிறது. இதன் காரணமாகவே தங்கம் திரைக்கதையின் இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் குறிப்பிட்ட அந்தத் திருநங்கை கதாபாத்திரத்தை இஸ்லாமியப் பின்னணியில் காண்பித்திருப்பதாகத் தோன்றுகிறது. மதிமாறன் சொல்வதுபோல குறிப்பிட்ட அத்திருநங்கை கதாபத்திரத்தை ஹிந்துவாகவோ அல்லது உயர் சாதி ஹிந்துவாகக் காட்சிப்படுத்தியிருந்தால் அடிப்படை காரணமின்றி கேலிக்குரியதாகப் போயிருக்கும்.
ஆனால் நாங்கள் அறிந்தவரையில், திருநங்கைகளின் மீது இஸ்லாமியர்கள் இப்படி அதீத வெறுப்பைக் காண்பித்ததில்லையே? என்று நீங்கள் கேட்கலாம். இக் கருத்தை மறுப்பதற்கில்லை. காரணம் இன்றைய நவீன உலகமும், அவர்கள் வாழும் சூழலும் இங்குள்ள இஸ்லாமியர்களின் திருநங்கைகளின் மீதான வெறுப்பை சற்று மட்டுப்படுத்தியிருக்கிறது அது இஸ்லாத்தில் அல்ல முஸ்லிம்களிடத்தில் என்பதே உண்மை.
//சத்தார் என்ற திருநங்கையை பார்த்து ஒரு கதாபாத்திரம் கூறுகிறது, நாத்தம் பிடித்த செண்டு என்று. இந்த வசனம் திருநங்கைக்காக கூறப்பட்டது அல்ல, இந்த வசனம் இஸ்லாமியர்கள் பூசக் கூடிய செண்டை குறிக்கிறது. இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதற்காகவே இந்த வசனம் திணிக்கப்பட்டிருக்கிறது//
ஏன் தோழர்மதிமாறன் அவர்கள் ஒன்றை விட்டு விட்டார்? "லவ் ஜிஹாது" க்கு எதிராக "கர் வப்ஸி" கொள்கையைத்தான் இயக்குனர் சுதா கொங்கரா இத்திரைப்படத்தின் மூலமாக செயல்படுத்திக் காண்பித்திருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தவில்லை ?என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
பொதுவாக திருநங்கைகள் சிறிது தூக்கலான நறுமண திரவியங்களை பூசுவது வழக்கம்தான். அந்த வசனத்தை திருநங்கைகளுக்கான தாக மட்டும் பார்ப்பதாக இருந்தாலும் பார்க்கலாம். அல்லது அது இஸ்லாமியர்களின் அத்தரை குறிப்பதாக எடுத்துக் கொண்டாலும் எடுத்துக்கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் அந்த வசனம் தவறில்லை. அத்தர் பூசுகிறேன் பேர்வழி என்று மூக்கை துளைக்கும் வாசனை திரவியத்தை தடவி, பிறரைப் பற்றி கவலை இன்றி அருகில் இருப்பவர்களுக்கு தலைவலியை கொடுக்கக்கூடிய அளவுக்கு மோசமாக அதை தடவி வரும் இஸ்லாமியர்களை பார்த்து நாத்தம் பிடித்த சென்று என்று கூறுவது தவறில்லை. ஒரு பாலைவன ஆடோட்டி செய்ததை இன்றும் தொருவோம் என்ற மன நோயில் முஸ்லிம்களில் பலர் இருப்பதுதான் அத்தரின் நெடிக்கு காரணம் என்று நினைக்கிறேன். இங்கு நாம் தமிழ் சினிமா எத்தனையோ திரைப்படங்களில் பார்பணர்களின் பழக்கவழக்கங்களை கேலி செய்து காட்சி அமைத்திருக்கிறார்கள். இப்போதும் செய்கிறோம் அப்போதெல்லாம் குளிர்கிறது என்றால் இப்போது மட்டும் ஏன் எரிகிறது ?
சரி...! ஒரு சாதரண திரைக் கதைக்காக மதிமாறன் எதற்காக இந்த அளவிற்கு பொங்கியெழ வேண்டும்?
மிக எளிமையான விடை
தமிழகத்தில் "மதிமாறன்கள் "போன்று முற்போக்கு பேசுவதாகக் காண்பித்துக் கொள்ளும் பலருடைய கள்ளக் காதலியான இஸ்லாமை, இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள், தனது திரைக் கதையின் மூலம் தாக்கிவிட்டதாக தோன்றியிருக்கிறது. 
அதன் விளைவே இது போன்ற அபத்தமான பிதற்றல்கள்..
இஸ்லாமிய அபத்தங்களை யார் தூக்கிக்கொண்டு வந்து முட்டு கொடுத்தாலும் தரமான பதில்கள் கொடுக்கப்படும். இது தோழர் மதி மாறனுக்கு மட்டுமல்ல, அரேபி முட்டாள் தனத்திற்கு முட்டு கொடுக்கும் அனைவருக்கும் பொருந்தும் .
இப்னு சல்மா,தஜ்ஜால் அழிப்பவன் உடன் சாதிக் சமத்    link for first part of this

கருத்துகள் இல்லை: