வியாழன், 31 டிசம்பர், 2020

அதிமுக விளம்பரமும் சன் டிவியும்.. தமிழகத்தின் நம்பர் ஒன் டிவி ய முடக்குவது தான் அவர்கள் டார்கெட்?

Image may contain: 2 people, text that says '#வெற்றிநடை போடும்_ தமிழகம் #Vetrinadai Podum Thamilagamae #Admk_Song #Admk_ part 2 Press toe ifull screen 0:58 1:00 தமிழகம்'
Devi Somasundaram : அதிமுக விளம்பரமும் சன் டிவியும்.. நேற்று எடப்பாடி அரசு விளம்பரம் சன் டிவில வந்துச்சுன்னு பொங்கின சில நடுனிலைகள்.. திமுகவுக்கு ஒன்னும் தெரியாது,அல்லது திமுகவை விட தனக்கு எல்லாம் தெரியும்னே அட்வைஸ் இந்த தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் சந்துல சிந்து பாடும் ஆட்கள் தொல்லை மிடில.... அட்லிஸ்ட் நாம பேசும் டாபிக் என்ன, அதை உள் விவரம் என்னன்னு அறிந்தாவது பேசலாம் ..ஆனா நானும் போராளி தான்னு காட்டிக்க பேசும் அரசியல் தான் காமடி . சரி இப்ப விளம்பரத்துக்கு வருவோம்...தரப்படுவது அரசு விளம்பரம் .அதை போட முடியாதுன்னு சொன்னா அதை காரணம் காட்டி அரசு கேபிள் சன் டிவிய தடை செய்ய முடியும்.
அரசு கேபிள் தான் அதிகம் மக்களை சென்றடைகிறது ..இப்ப மறுத்து சானலை ப்ளாக் செய்யப்பட்டா தேர்தல் சமயத்தில் திமுக விளம்பரங்களை சாணக்கியா டிவி போடுமா ? .
வீம்பிற்கு எதையாவது செய்து, தெர்தல் நேரத்தில் அடிமைகள் சேனலை மொத்தமா பிளாக் பண்ணிட்டா நம்ம வீராப்பு வீராசாமிகள் எல்லா வீட்டுக்கும் நேரில் போயி, திமுக விள்ம்பரத்தை எல்லாம் லைவ்வா நடிச்சுக் காட்டிட்டு வருவாங்களா.? .
குணா வெளில வந்த போது ஆதரித்தது யார்...இதே சன் டிவி தான ? ...காசு தான் முக்கியம் என்றால் ஏன் குணாவை சேர்த்து தன் பேரை கெடுத்துக்கனும்.
அப்படி காசுகாக விளம்பரம் என்றால் அந்த விளம்பரத்திற்கான கட்டணம் எவ்வளவு என்றாவது தெரியுமா ? ..
அந்த விளம்பர நேரத்தில் போடப்பட்டு வந்த வணிக விளம்ப ரம் நிறுத்தப்பட்டதால் சன் டிவியின் இழப்பு எவ்வளவு என்றாவது தெரியுமா ? ...காசு தான் முக்கியம் என்றால் தமிழகத்தின் நம்பர் ஒன் டிவி அரசு விளம்பரத்திற்கு நிற்க எந்த தேவையும் இல்லை..அதை தாண்டி தனியார் விளம்பரத்திலயே காசு வந்து விடும்..
பின் ஏன் தன் வருமானத்தை இழந்து சன் டிவி விளம்பரம் போடனும் ...ஒரு வேளை அவர்களுக்கு பிஸ்னஸ் செய்யத் தெரியவில்லயோ ? ..
அதுல ஒருத்தர் மிசா டைம்லயே போட முடியாதுன்னு எதிர்த்து நின்னமேன்னு வேற காமடி செய்தார் ..மிசா டைம்ல போட முடியாதுன்னு சொல்ல்ல ..மாத்தி தான் போட்டார் கலைஞர் .குடுக்கப்பட்ட ரூல்ஸ் குல்ல தான் ஆட முடியும்....மிசா கைதானவர் விவரம் முரசொலில போடக் கூடாதுன்னு தடை .. அண்ணா நினைவு நாளூக்கு வர இயலாதவர்னு அதை எழுதினார் கலைஞர் ..அட்லிஸ்ட் கலைஞர் மட்டுமாவது வெளில இருந்ததால தான் அன்று நடந்த மிசா கொடுமைகளில் கட்சியினருக்கும் அவர் குடும்பத்திற்கும் ஆறுதலாய் இருக்க முடிந்தது..
நானும் சண்டியர்னு கலைஞர் நடந்திருந்தா இன்னிக்கு திமுகன்னு ஒரு கட்சியே இருந்திருக்காது ..
அரசியல் என்னன்னு தெரிந்தாவது எழுந்துஙக...அது நம்ம வீட்டு அடிப்படி குழம்பு வைக்கிறது மாதிரின்னு பேச வராதீஙக்.
ஒ பி எஸ்க்கு நிதி தர கம்பெனிகள் கண்டுக்கவே பட வில்லை ..ஆனா திமுகவுக்க்கு தேர்தல் நிதி தந்தாலே மிரட்டப் படுகின்றனர் . தன்னை காப்பாதிக்க இந்த வச்சுக்கன்னு அவர்கள் பிஜெ பிக்கும் ஒரு பேவர் செய்ய தான் வேண்டி இருக்கு ..
அதலாம் முடியாது நான் கொள்கை வாதின்னு நின்னா திமுகவ இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்...இந்த சன் டிவிக்கு எதிரான பொங்கல்கள் அதை தான் செய்ய விரும்புகிறார்கள்..
நேரடியா இல்லாம மறைமுக ஆதிக்கவாத ஆதரவாளர்கள்.
சரி ..இந்த நடுனிலைகள் பொங்கல் நேர்மையானது தானா ? ...இல்லை இவர்கள் சண் டிவிக்கு எதிரா நம்மை நிறுத்தி எடப்பாடியின் தவறை பேச விடாமல் செய்து இருக்கின்றனர் ..
அரசு செலவுல விளம்பரம் போட்டு அதிமுக என்ற கட்சிக்கு விளம்பரம் செய்வது சட்டபடி குற்றம்...அதிகார துஷ்பிரயோகம்...
இதை பொது சமூகம் பேசிவிடக் கூடாது என்ப்தற்கு தான் சன் டிவிக்கு எதிரா பொங்கல் வைக்கப் பட்டது ..இப்பவும் இந்த அதிகார வரம்பு மீறளை கேட்க வேண்டியது எதிர் கட்சிகள் தான் ..சன் டிவி வேலை இல்லை.
சரி மற்ற கட்சிகள் கேட்கும்னு நம்பினா அது வழக்கம் போல் சொர ஒன்னு விதைச்சா விதை ஒன்னா மொளைக்கும் டைப் காமடி தான்... வழக்கம் போல் இதையும் திமுக தான் கேட்கனும்.. நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து விளம்பரத்த்தை நிறுத்தனும்.
அப்றம் ஜெயா டிவில ஏன் வர்ல, கலைஞர் டிவில ஏன் வர்லன்னு வராதீஙக..தமிழகத்தின் நம்பர் ஒன் டிவி ய முடக்குவது தான் அவர்கள் டார்கெட் .அத்தோடு பாமக கூட்டணிகுள் குழப்பம் செய்வதை பேசுவதும் சன் டிவி தான் ..அதை கார்னர் செய்வது தான் அவர்கள் நோக்கம்..
( .அப்றம் செந்தில் குமார் எம் பி ஸ்கிரின் ஷாட்லாம் நான் பாத்தாச்சு....அதை தூக்கிட்டு வராதீஙக். அவருக்கும் சேர்த்து தான் போஸ்ட்.. .அவர் திமுகவுக்கு அட்வைஸ் செய்வார்ன்னா நான் அவர்ககு அட்வைஸ் செய்யக் கூடாதா ) .

கருத்துகள் இல்லை: