புதன், 30 டிசம்பர், 2020

திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் கார்டு திட்டம் ரத்தாகும் : துரைமுருகன் பேச்சு

 dhinakaran :பொன்னை:வேலூர் அடுத்த காட்பாடி தொகுதி முத்தரசிகுப்பம் கிராமத்தில் நேற்று, அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற திமுக மக்கள் சபை கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:   ரஜினி தனது உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டுதான் அரசியல் கட்சி துவங்கும் முடிவை கைவிட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். தமிழக அரசு பொங்கலுக்கு ₹2,500 வழங்கும் திட்டத்தை திமுக தடுக்கவில்லை. மக்கள் பணியாற்றக்கூடிய அரசு ஊழியர்கள் மூலமாகத்தான் வழங்க வேண்டும், பொங்கல் தொகையாக ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றுதான் திமுக வலியுறுத்தி வருகிறது.



வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று கோட்டைக்கு செல்லும் முன்னர் மக்களை பெரிதும் பாதித்து வரும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை ரத்து செய்துவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: