புதன், 20 நவம்பர், 2019

பெண்களை பற்றி மனுஸ்மிருதி கூறுவது என்ன? அதிர்ச்சி அடையாதீர்கள் ....

Jeyarani Mayilvahanan  : பெண்களை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? . இது
சாம்பிள் மட்டுமே...இதை விட மோசமான, ஆபாசமான சரக்கு் இந்து மதம் முழுக்கக் கொட்டிக் கிடக்கிறது. என்னுடைய கண்ணியம் கருதி சிலவற்றை மட்டும் பதிவிடுகிறேன்.
1. மனுஸ்மிருதி
மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25
மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25
மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25
மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,
மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"
மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"
மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."
மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."
மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;".
2. மகாபாரதம்
மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல், ''பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. - எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! - எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை.
எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.
49.22 இல், ''பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்பு போன்றவள். பெண் மாய்கை, வஞ்சகக் குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
43.23 இல், பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள்;. தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள், விரும்ப மாட்டார்கள்.
3.ராமாயணம்
இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல், ''உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள். வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்." பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள். ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள், எனவே, அடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்தது.
பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், ''ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்."
4. திதி மந்திரம்:
யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண...
இந்த மந்திரத்தின் அர்த்தம்:
என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது. உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம், நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த "புனித" மந்திரம் சொல்கிறது.
தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது
என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம....
என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.
5. பகவத் கீதை
பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.
மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய
ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்
அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்கள். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
6. அதர்வண வேதம்
அதர்வண வேதத்தில் 6-2-3 இல், ''குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது. ஆண் மகவை விரும்புகிறதேயல்லாது, பெண் மகவை விரும்புகிறதில்லை. பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும். புக்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும், பெண் மகவு பிறக்க வேண்டாம்."
இறுதியாக
7. காயத்ரி மந்திரம்
(காயத்ரி என பெயர் வைத்திருந்தாலும்)
காயத்ரி மந்திரத்தை நான்காவது வர்ணமான சூத்திரர்களும், பெண்களும் சொல்லக்கூடாது. பராசர ஸ்மிருதி என்ற நூலில் இந்த குறிப்பு உள்ளது.- Jeyarani Mayilvahanan

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Very worst explanation , first read manusmriti fully & understand, don' t simply blame that, you are not capable to understand it