சபரிமலை தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுவை கடந்த நவம்பர் 14 அன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் முந்தைய தீர்ப்பான 'அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யத் தடை ஏதுமில்லை' என்பதையும் உறுதிசெய்தது. எனவே, கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்புடன் பெண்களை சபரிமலைக்கு கேரள அரசு அழைத்துச் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் எகிறிய சூழலில்தான், கேரள அரசு பின்வாங்கி விட்டது.
இந்தக் குழப்பமும் பதற்றமும் நிறைந்த சூழ்நிலையில், நவம்பர் 16–ம் தேதி, மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினமே ஆந்திர மாநிலத்திலிருந்து பத்து இளம் பெண்கள் ஐயப்பனை தரிசிக்க பம்பை நதிக்கரையை அடைந்தனர். கடந்த ஆண்டு பாதுகாப்பு கொடுத்த அதே கேரள போலீஸ், இந்த முறை சபரிமலையின் ஆசாரங்களையெல்லாம் எடுத்துக்கூறி திருப்பி அனுப்பிவிட்டது. கேரள இடதுசாரி அரசின் இந்த நிலைப்பாடு சி.பி.எம் கட்சியின் டெல்லி தலைமைக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
இதற்கிடையே,
கடந்த முறையைப் போலவே தற்போதும் இந்த விஷயத்தை வைத்து கேரள மக்களின்
கவனத்தை ஈர்க்கும் வேலையை ஆரம்பித்துவிட்டன பா.ஜ.க மற்றும் சங்பரிவார்
அமைப்புகள். இளம்பெண்கள் வரக் கூடாது என்று கேரள அரசு கூறினாலும், அதையும்
மீறி பெண்கள் வரத்தான் செய்கிறார்கள். அவர்களையெல்லாம் நிலக்கல் என்ற
இடத்தில் தடுத்து நிறுத்தி அனுப்பிவிடுகின்றனர்.
இந்த விஷயத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டன ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள். கிட்டத்தட்ட 'ஆர்.எஸ்.எஸ் ஆக்ஷன் ஃபோர்ஸ்' என்பதுபோலவே அதிரடியாகக் களத்தில் சுழல்கின்றனர். பத்தனம்திட்டா, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட கேரளத்தின் பல இடங்களிலும் செல்போன் சகிதமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலைக்குச் செல்வதற்காக வந்திறங்கும் இளம்பெண்களைப் பின்தொடரும் இவர்கள், வீடியோவும் எடுத்து உடனுக்குடன் தங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறார்கள்.

இதைவைத்தே அந்தப் பெண்களை வழியில் மடக்கும் 'ஆக்ஷன் ஃபோர்ஸ்' பிரதிநிதிகள், அவர்களையெல்லாம் மிரட்டி திருப்பி அனுப்ப ஆரம்பித்துள்ளனர். இப்படி இவர்கள் அதிரடியாகக் களத்தில் இறங்கியிருப்பது, சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் பெண்கள் அமைப்புகளைப் பதற வைத்துள்ளதோடு, பக்தர்களையும் சேர்த்தே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டும் பிரச்னைகள் வெடித்து, அது பெரிதாகப் பரவிவிடுமோ என்பதுதான் அவர்களுடைய கவலை. இப்படி 'ஆக்ஷன் ஃபோர்ஸ்'போல் செயல்படுபவர்களை கேரள போலீஸும் கண்டு கொள்வதில்லை என்பது கூடுதல் கவலை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக