
இது குறித்து, ஒரு சீனியர், பா.ஜ., தலைவரிடம் பேசிய போது, 'ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகம், நிதி மற்றும் உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக், பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக் ஆகிய கட்டடங்கள் முற்றிலுமாக மாற்றப்பட உள்ளன. 'இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை இடிக்காமல், அது, அருங்காட்சியகமாக மாற்றப்படும்.
இங்கு பார்வையிட வரும் மக்கள், இந்திய வரலாற்றை பார்க்கலாம்' என்கிறார் அவர். அதே நேரத்தில், பார்லிமென்டிற்கு, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாம். 'பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய அரசு அலுவலங்கங்கள், நவீன முறையில் கட்டப்பட உள்ளன. 'இதற்காக, ராஷ்டிரபதி பவனுக்கு அருகில், இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும், 2024ல், அடுத்த லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள், புதிய பார்லிமென்ட் காம்ப்ளக்ஸ் கட்டி முடிக்கப்படும்' என்கிறார் அந்த தலைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக