செவ்வாய், 19 நவம்பர், 2019

இந்திய அரசியலின் ஆணிவேர் சாதிய கட்டமைப்பு... . கருவறையில் இருந்து கல்லறை வரை ...


சுமதி விஜயகுமார் : பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொண்டு வந்த போது எனக்கு அது முட்டாள் தனமாக தோன்றியது. ஒரு இடத்திற்கு ஆண் வரவேண்டுமா அல்லது பெண் வர வேண்டுமா என்பதை விட தகுதியானவர் தான் வரவேண்டும். இதற்கு எதற்கு இடஒதுக்கீடு என்று தோன்றியதுண்டு. அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டவுடன் நான் தேடி தேடி பார்த்த படித்த விஷயங்களில் ஒன்று இடஒதுக்கீடு பற்றியது தான். பல விவாதங்கள் பார்த்ததுண்டு. அதன் பிறகுதான் இடஒதுக்கீட்டின் தேவையை புரிந்துகொள்ள முடிந்தது.
இந்திய அரசியலை மேலோட்டமாக பார்த்தால், மதத்தின் மேல் கட்டமைத்து போல் தோன்றும். ஆனால் இந்திய அரசியலின் ஆணிவேர் சாதிய கட்டமைப்பு. கருவறையில் இருந்து கல்லறை வரை நமக்கான இடத்தை தீர்மானிப்பது இந்த சாதி தான். நாங்கெல்லாம் சாதி பாக்குறதில்ல என்று சொல்பவர்களும் இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறாங்க என்று சொல்பவர்களும் தங்கள் வீடு குழந்தைகளுக்கு அவர் சாதியில் தான் மனம் முடிப்பார்கள். அப்படியே வேறு சாதியில் மணம் முடித்தாலும் எந்தெந்த சாதிகளில் எல்லாம் மணம்முடிக்க கூடாது என்றிருக்கிறது. இந்த சாதியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதில் எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை .

எல்லா சாதியிலும் எல்லா புழுக்களும் உண்டு. ஆனால் இந்தியாவில் மேலோங்கி நிற்பது பார்ப்பனீயம் , பார்ப்பனர்கள். இவர்களை புரிந்துகொள்ளாமலோ இல்லை விமர்சிக்காமலோ இந்திய அரசியலை புரிந்து கொள்ளமுடியாது. அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுமானால் பார்ப்பனர்கள் அல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் யார் எந்த பதவி வகிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது இந்த பார்ப்பனர்கள் தான். அதெல்லாம் இல்லை என்பவர்களுக்கு, நீங்கள் எந்த பெரிய துறையில் வேலை பார்த்தாலும் , உங்கள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் யார் என்று பாருங்கள்.
பார்ப்பனர்கள் எல்லாம் சாதுக்கள், எந்த வம்பு தும்புக்கும் போனதில்லை, வன்முறையில் ஈடுபட்டதில்லை என்பவர்களுக்கு வரலாறு முழுவதும் பார்ப்பனர்களின் சதியும் வெறியும் பரவி கிடக்கின்றன. V P சிங்
கொண்டு வந்த இடஒதுக்கீட்டின் போது கலவரம் செய்து தீக்குளித்தது இந்த பார்ப்பனர்கள் தான். எந்த இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போய்விட்டது என்று கூப்பாடு போட்டார்களோ , அதே போல உயர் சாதி வறியவர்களுக்கு ஒதுக்கீடு கொண்டு வந்த போது பேரமைதி காத்தார்கள்.பெரியார் மட்டுமில்லை அம்பேத்கரும் அதனால் தான் இந்த பார்பனீயத்தையும் பார்ப்பனர்களையும் தங்கள் கடைசி மூச்சு வரை எதிர்த்தார்கள்.வரலாறில் பார்ப்பனர்களை எதிர்த்தவர்களின் வரலாறு காணாமல் ஆக்கப்பட்டது.
ஆயிரம் அரசியல் பேசினாலும் இந்த பார்பனீயத்தையும் பார்ப்பனர்களையும் தோலுரிக்காமல் செல்வது என்பது வரலாறுக்கு நாம் செய்யும் துரோகம். மோடியின் ஆட்சியை அதிகம் வரவேற்பவர்கள் ஒன்று பார்பனர்களாக இருப்பார்கள் இல்லையென்றால் பார்ப்பன அடிவருடிகலாக இருப்பார்கள். இந்த பார்ப்பனர்களின் வஞ்சகத்தை கொஞ்சமேனும் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த பதிவில் இணைத்துள்ள காணொளியை அவசியம் பாருங்கள். பார்ப்பதற்கு முன் வசந்தா கந்தசாமி யார் என்று தெரிந்து கொள்வது மிக அவசியம்.
வசந்தா கந்தசாமி. பாத்திமா லத்தீப் இறந்து போன IIT சென்னையில் பனி புரிந்தவர். அவரின் தகுதி என்ன என்பதை google செய்து கொள்ளலாம். அவர் தொடர்ந்த வழக்கும் , அதன் தீர்ப்பும், தீர்ப்புக்கு பின்பு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்த பின்பே IIT வசந்தா கந்தசாமிக்கு கொடுத்த பதவி உயர்வும் சொல்லும் பார்ப்பனர்களின் கள்ளத்தனத்தை.
திராவிடம் வந்து அனைத்தும் பறிபோய்விட்டது என்று சொல்பவர்களுக்கு, திராவிடம் மட்டும் அறநிலையத்துறையை கொண்டுவராமல் இருந்திருந்தால் எல்லா கோவில்களும் சிதம்பரம் கோவில்களாகதான் மாறிப்போய் இருந்திருக்கும். நம்பமுடியவில்லை என்றால் இன்னும் நான்கு வருடங்கள் பொறுங்கள். அடுத்த முறையும் வளர்ச்சி நாயகன் மோடி ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் அறநிலையத்துறையை ஒழித்து கோவில்கள் எல்லாம் contract என்ற பெயரில் தனியுடைமை ஆகி கோவில் உள்ளே நுழைய கூட காசு என்று ஆக்கிவிடுவார்கள். இன்னொரு பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் வந்து மீட்டு கொடுத்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று வெளியில் இருந்து கும்பிட்டு கொள்ளலாம்.
பி கு 1 : அவசியம் காணொளியை காணுங்கள்
பி கு 2 : பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் , வசந்தா கந்தசாமி முன் வைத்த சவால்களுக்கு பதில் அளித்துவிட்டு பிறகு என்னிடம் கேள்வி கேளுங்கள்
பி கு 3 : எல்லா பார்ப்பனர்களும் அப்படி இல்லை என்பவர்களுக்கு, எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள் உண்டு. பார்ப்பனர்கள் என்று சொன்னால், அந்த வகுப்பில் பிறந்தவர்களில் எவருக்கு கோபம் வருவதில்லையோ, அவர்களை எல்லாம் நான் மனிதர்களாக தான் பார்க்கிறேன்

கருத்துகள் இல்லை: