புதன், 12 டிசம்பர், 2018

புலனாய்வில் நக்கீரன் போல் எத்தனை பேரால் தாக்குப்பிடிக்க முடியும்? அந்திமழை பத்திரிகையாளர்கள் கருத்து!

nnnakkheeran.in - athanurchozhan : தமிழில் அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், மக்களோடு நின்று மக்கள் பிரச்சனைகளில் அதிகாரவர்க்கத்தின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவதில் நக்கீரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நக்கீரனின் புலனாய்வுப் பயணத்தின் விளைவாக அது சந்தித்த அடக்குமுறைகளும், வழக்குகளும் ஏராளம். நக்கீரன் சந்தித்த ஒவ்வொரு வழக்கிலும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் ஏதேனும் ஒரு தீர்ப்பை பெற்றிருக்கிறது.
இதழியல் துறைக்கு நக்கீரன் பெற்றுத்தந்த சட்டபூர்வ உரிமைகள் இதழியல் வரலாற்றில் முத்திரைகளாக நீடித்திருக்கும். 2018 அக்டோபர் 5 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு, மிகப்பெரிய எதிர்ப்புக்குப் பிறகு நீதிமன்றமே அவரை விடுவித்தது. அதிலும் அவர் வரலாறு படைத்தார். ஆளுநர் மாளிகையின் விருப்பத்துக்காக போடப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டாலும், நக்கீரன் ஆசிரியரை சிறைக்கு அனுப்ப முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது உலக அளவில் பேசப்படும் விஷயமாக பதிவாகியது.
இந்நிலையில்தான், புலனாய்வு கட்டுரைகள் தொடர்பாக அந்திமழை என்ற மாத இதழ், தனது டிசம்பர் இதழில் புலனாய்வு இதழியலில் தொடர்புடைய பலருடைய கருத்துகளை பிரசுரித்திருக்கிறது.

duraibharathi
துரை
நக்கீரனில் முன்பு ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த துரை நக்கீரனின் புலனாய்வு குறித்து கூறியிருப்பது…


“நக்கீரன் இதழ் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் அங்கே ஆசிரியர் பொறுப்பில் இருந்தேன். அப்போது, நாங்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள், வழக்குகள் ஏராளம். 1990ல் அதிமுக ஜா, ஜெ என்று பிளவுபட்டுக் கிடந்த காலத்தில், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் கொண்ட அணியினர் ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்துவந்து அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற முயன்று ஒருநாள் விடியற்காலையில் தாக்குலில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் புகைப்படக் கலைஞராக இருந்தவர் முத்துராமலிங்கன்.
அந்தத் தாக்குதல் நிகழ்ச்சியை அவர் மட்டுமே புகைப்படம் எடுத்தார். அதனால் தாக்குதலுக்குள்ளாகி காமிரா பறிக்கப்பட்டது. அந்த பிலிம்ரோல் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. காவல்துறை அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்று பூசிமெழுகிவிட்டது.

காவல்துறையின் பொய்யை அம்பலப்படுத்தக் கூடியவை அந்தப் படங்களே. எனவே, அவற்றைக் கைப்பற்ற முடிவு செய்தோம்.< எங்களுக்கோ வேறு காமிரா வாங்கித் தருகிறோம் என்று அரசியல் தலைவர்கள் கூறினார்கள். ஆனால், அந்த புகைப்படங்களின் வலிமை எங்களுக்கல்லவா தெரியும்? அங்கே நடந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி தனது கடிகாரத்தை இழந்துவிட்டார். அது கீழே கிடந்தது என்று எடுத்துக் கொண்டுபோய் (புதிதாக வாங்கி தேய்த்து…) நக்கீரன் கோபால் அந்த போலீஸ் அதிகாரியிடம் அளித்தார். அவர் மூலமாக விபரங்களைச் சேகரித்தார். பிலிம்ரோல் ஒரு டிஎஸ்பி, ஏட்டு ஆகியோர் கையில் இருந்தது. அவர்களிடம் வாங்கிக் கொள்ளுமாறு அந்த அதிகாரி சொன்னார். அவருக்கு அந்த ரோலில் இருக்கும் படங்களின் முக்கியத்துவம் தெரியாது.

அதிகாரி சொன்ன அந்த டிஎஸ்பி, ஏட்டுவை சந்திக்கச் சென்றோம். நான், முத்து, ஒரு ஆட்டோ டிரைவர். அப்போது ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தனர் அந்த அதிகாரிகள். அந்த ஏட்டுவிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் மேலதிகாரியிடம் ஒரு கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ஒரு நிமிடம் இதை வச்சுக்கோப்பா என்று காமிராவை சாதாரணமாக கொடுத்தார். அந்த ஒரு நொடியில், காமிராவிலிருந்த பிலிம் ரோலை மாற்றி, வேறொரு பிலிம்ரோலை  கொடுத்துவிட்டோம். டிஎஸ்பி உஷார் பேர்வழி. அந்த பிலிம்ரோலை இவங்ககிட்ட கொடுத்திராதப்பா என்றார்.

 ஏட்டு, ‘அய்யா இதோ என்னிடம் பத்திரமாக இருக்கய்யா’ என்று பிலிம்ரோலை காட்டினார். அந்த ஏட்டுவை எங்கள் ஆட்டோவில் கூட்டிக்கொண்டு மைலாப்பூரில் ஒரு ஸ்டுடியோவுக்கு பிரிண்ட் போட அழைத்துப் போனோம். அங்கே ஏற்கெனவே கோபால் ரகசியமாக போய் இருந்தார். ‘இன்று ஞாயிற்றுக்கிழமை, பிரிண்ட் போட கெமிக்கல் இல்லை என்று சொல்லுமாறு கூறினார்.

’ இன்று பிரிண்ட் போட்டால் பிலிம் ரோல் மாறிய குட்டு வெளிப்பட்டுவிடும் அல்லவா? எனவே, ஸ்டுடியோவில் இருந்தவரும் அப்படியே சொன்னார். சரி கிளம்புவோம் என்று ஏட்டு சொல்ல, அவரை பத்திரமாக ஆட்டோவுக்கு காசுகொடுத்து அனுப்பிவிட்டு, ஆட்டோ ஒரு தெரு தள்ளிப் போனதும் திரும்ப ஸ்டுடியோவுக்கு ஓடினோம். அப்போது போடப்பட்ட பிரிண்டுகள் நக்கீரனில் அட்டைப்படமாக வெளியாகி ஒரு கலக்கு கலக்கின.

ll; இந்த பிலிம்ரோல் ஜெ.அணியினருக்கு முக்கிய துருப்புச்சீட்டாக தேவைப்பட்டது. ஏனெனில் அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு என்று அப்போது இழுபறி. எனவே, அந்த ரோலைக் கொடுக்கும்படி பேரம் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் பதினைந்து லட்சம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். நான் அன்று இருந்த மனநிலையில் மறுத்துவிட்டு வந்தேன். கோபால் அவர்களும் அதே மன உறுதியில் நின்றார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்” என்று துரை கூறியுள்ளார்.
t;கோவி.லெனின்< அதே இதழில் நக்கீரன் தனது புலனாய்வில் பாரபட்சம் பார்த்ததில்லை என்று பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டிருக்கிறார், நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் கோவி.லெனின்…
“அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் மக்களின் கேள்விகளுக்கான பதிலைத் தேடி நக்கீரன் பயணிக்கும் எனப் பொதுவான ஒரு பார்வை உண்டு. திமுகவின் 1981-91 ஆட்சிக்காலத்தில் அதிமுக தலைமைக்கழகம் தொடர்பான இரு பிரிவினரின் மோதலில் திமுக அரசின் காவல்துறை மேற்கொண்ட ஒருசார்பு நடவடிக்கைகளை புகைப்படங்களுடன் வெளிப்படுத்தியது நக்கீரன்தான். பின்னர் நடைபெற்ற திமுக ஆட்சிகளிலும் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர் மீதான தாமிரபரணி தாக்குதலை தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக் எனத் தலைப்பிட்டது நக்கீரன். மதுரை தினகரன் அலுவலகத் தீவைப்பு நிகழ்வில் குற்றவாளி அட்டாக் பாண்டியின் படத்தை முதலில் வெளியிட்டு அம்பலப்படுத்தியதும் நக்கீரன்தான். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் சேலம் அங்கம்மாள் காலனியில் மேற்கொண்ட அத்துமீறல்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியே கொண்டுவந்ததும் நக்கீரனே.> அரசியல்வாதியின் தொடர்பயணத்தில் அவருடைய பங்களிப்புக்கு கிடைக்கும் பாராட்டுகளைவிட விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், பழிதூற்றல்களே மிகும். நக்கீரன் மீதும் விமர்சனங்களை வைப்போர் இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்போரின் குரலாக ஒலிப்போரில் தொடங்கிப் பலரும் இந்த வரிசையில் நிற்கிறார்கள். ஆரோக்கியமான விமர்சனங்களே புலனாய்வு இதழியலை கூர்மைப்படுத்தும் என்பதை நக்கீரன் உணர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியான செயல்பாட்டின் விளைவே, உச்சநீதிமன்றம் வரை நக்கீரன் மேற்கொண்ட போராட்டத்தால் இந்திய இதழியலின் கருத்துரிமைக்குக் கிடைத்துள்ள சட்டப்பாதுகாப்பு. தன்னை விமர்சிப்போரின் கருத்துரிமைக்கும் சேர்த்தே அந்தப் பாதுகாப்பை பெற்றுத் தந்துள்ளது நக்கீரன்” என்று கூறியிருக்கிறார் கோவி.லெனின். மாலன்

மூத்த பத்திரிகையாளர் மாலன் தனது கருத்தாக புலனாய்வு இதழியல் குறித்து பல விஷயங்களைக் கூறிவிட்டு, நக்கீரனின் புலனாய்வு பணி குறித்து தெரிவித்துள்ள கருத்து…

mm

“புலனாய்வு இதழியலைத் தொடர்ந்து மேற்கொள்ள நெருக்கடிகளைத் தாங்கும் உறுதி வேண்டும். இதற்கு உதாரணம் நக்கீரன் இதழ். அவர்கள் எல்லா அரசுகளிடம் இருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நெருக்கடிகளை எதிர்கொண்டனர். அரசியல்வாதிகளிடம் இருந்து மட்டுமல்ல, அதிகாரிகளிடம் இருந்தும்கூட. இதைத் தாக்குப்பிடித்து உச்சநீதிமன்றம் வரை சென்று பத்திரிகை சுதந்திரத்தை உறுதிசெய்யும் முக்கியமான ஒரு தீர்ப்பை (ஆட்டோ சங்கர் வழக்கில்) வாங்கி வந்தார்கள். ஆனால், எத்தனை பேரால் நக்கீரன்போல் இவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்பது கேள்வி” என்று தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் மாலன்.

கருத்துகள் இல்லை: