செவ்வாய், 11 டிசம்பர், 2018

போலி பெரியார்வாதிகளின் பேரணி

AThi Asuran : தமிழ்த்தேசியம், பொதுவுடைமை பேசி வந்தவர்கள் இன்று பெரியாரையும் தங்களது தலைவர்களில் ஒருவராக அறிவித்து இயங்குவது வரவேற்க வேண்டிய செயல். ஆனால், அப்படி வருவதற்கு முன்பே, பெரியாரிஸ்ட்டுகளுக்குள் பிரிவினையை உண்டாக்குவது எந்த வகையில் பெரியாரியல்?
யாராக இருந்தாலும் மற்றொருவரை நீ பெரியாரிஸ்ட்... நீ பெரியாரிஸ்ட் இல்லை... என்று சொல்லி ஒதுக்குவது எந்த வகையில் பெரியாரியல்?
தி.மு.க.வை விமர்சனமின்றி ஆதரித்தால் அவர் தாழ்ந்த பெரியாரிஸ்ட், தி.மு.க.வை அவ்வப்போதாவது எதிர்த்தால் தான் உயர்ந்த பெரியாரிஸ்ட் என்ற அளவுகோல் "தமிழ்த்தேசிய சாஸ்திர" அளவுகோலாகவே தெரிகிறது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, பெரியாரிய உணர்வாளர்களால் இயங்கினால் இந்தச் சிக்கல் வந்திருக்காது.
தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கும் தோழர் சுபவீ, தமிழ்நாட்டில் பெரியாரியப் பெண்ணியத்தை பரப்புவதிலும், அதை வாழ்வியலாகவே ஏற்றுப் பின்பற்றுவதிலும் பல தலைமுறைகளைக் கடந்து வந்த தோழர் ஓவியா, தி.மு.க.விலேயே பொறுப்பாளர்களாக இயங்கும் தோழர் ஆ.இராசா, கனிமொழி போன்றவர்கள் பெரியாரிஸ்ட்டுகள் இல்லை என தமிழ்த்தேசியவாதிகள் கூறுவதும் அதை நாம் அமைதியாக ஏற்றுக்கொண்டு வழிமொழிவதும் சரியா எனத் தெரியவில்லை. தி.க.மேடைகளில் அமைச்சர் நெடுஞ்செழியன் பேசியதைப்போல அ.தி.மு.க, காங்கிரசில் யாராவது பெரியாரிஸ்ட் இருந்தால்கூட அழைப்பதில் தவறில்லை.

கருத்துகள் இல்லை: