திங்கள், 10 டிசம்பர், 2018

பேராசிரியர் சுபவீரபாண்டியனை புறக்கணித்த கருஞ்சட்டை பேரணி! பின்னணியில் யார்?

பெரியார் படம் இல்லாத பெரியார் நினைவு?

திமுக வை எதிர்க்க பெரியாரை பயன்படுத்தும் பேரணி....பார்ப்பனீயத்தின் வீரியம் மிகப்பெரிது ....Narayanaperumal Jayaraman

Ganesh Babu : வரும் 23ஆம் தேதி திருச்சியில் நடக்கவிருக்கும் கருஞ்சட்டை பேரணியில் பேராசிரியர் Suba Veerapandian அவர்களை திட்டமிட்டுப் புறக்கணிக்க முயற்சித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இதுப்போன்ற கருஞ்சட்டை ஒருங்கிணைவுக்காக முதன்முதலில் முயற்சிகளை மேற்கொண்டவர் அவர்தான்.
ஆனால் அவரை ஒதுக்க சிலர் முயன்றதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை. பேரறிஞர் அண்ணாவையே ஏற்க மறுக்கும் மே 17 உள்ளிட்ட சில அமைப்புகள், பேராசிரியர் சுப.வீயையா புறக்கனிக்காமல் இருப்பார்கள்?
வேடிக்கையும், வேதனையும் என்னவென்றால் பேராசிரியரின் தி.மு.க ஆதரவுதான் பிரச்சனை என்கிறார்களாம். பெரியாரே ஆதரித்த தி.மு.கவை பெரியாரிஸ்ட்டுகள் ஆதரிப்பது தவறா?
பெரியாரை ஆதரிப்பவர்களை நேசியுங்கள். பெரியாரை எதிர்ப்பவர்களைக்கூட மாற்றுக்கருத்தாளர் என்று மதிக்க முயலுங்கள். ஆனால் தங்களை பெரியாரைவிடவும் அதிக பெரியாரிஸ்ட்டு என்று சொல்லிக்கொள்ளும் மோசடிப் பேர்வழிகளை மட்டும் ஒருப்போதும் நம்பாதீர்கள்.
'அவரது தி.மு.க ஆதரவுதான் நெருடலாக இருக்கிறது' என்று வியாக்கியானம் பேசும் 100% pure பெரியாரிஸ்ட்டுகளைப் பார்த்துக் கேட்கிறேன். 'இந்த மாநாடும், பேரணியும் அடிப்படையில் இந்துத்துவத்தை எதிர்ப்பதற்காக' என்கிறீர்கள். நல்லது.

நடைமுறையில் இன்றைய தேதிக்கு அரசியல்களத்தில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பியால் முழுவீச்சாக எதிர்க்கப்படும் அரசியல் கட்சி தி.மு.க என்பதை பள்ளிச் சிறுவர்கள்கூட அறிவார்கள். அதேப்போல சமூக வலைதளத்தில் காவிகளால் மிகக் கூடுதலாக வெறுக்கப்படும், தூற்றப்படும் பெரியாரிஸ்ட்டுகளுள் ஒருவர் பேராசிரியர் சுப.வீ.
அத்தகைய தி.மு.கவை ஆதரிக்கும் சுப.வீயை புறக்கணித்துவிட்டு நீங்கள் முன்னெடுக்கும் காவி எதிர்ப்பால் யாருக்கு என்ன பயன்?
அந்த மாநாட்டில் லட்சம் பேர் கலந்துக்கொள்கிறார்களாம். மகிழ்ச்சி. அந்த மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகிலேயே 'சுப.வீயால் திராவிடத்தை நோக்கி ஈர்க்கப்பட்டவர்களின் மாநாடு' ஒன்றை நடத்தினால், உங்கள் மாநாட்டைவிட இரண்டு மடங்கு கூட்டம் அங்குக் கூடும் என்பதுதான் உண்மை.
இப்படி கருஞ்சட்டைப் படையை நோக்கி ஆயிரமாயிரம் இளைஞர்களை திரட்டுவதற்காக உழைத்து வரும் அந்த மனிதர் புறக்கணிக்கப்படுவதை, அவரது திராவிட இயக்க தமிழர் பேரவை ஒதுக்கப்படுவதை நான் பெரிதும் மதிக்கும் சக பெரியாரிய இயக்கங்கள்கூட கண்டும்காணாமல் இருந்துவருகிறார்கள்.
பேராசிரியரோ இதையெல்லாம் பெரிதுப்படுத்தாமல், 'வெளியில் நின்று வாழ்த்துகிறோம்' என்று அறிக்கைவிடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் செல்லும் பெருந்தன்மைக்காரர். ஆனால் அந்தப் பெருந்தன்மையை எங்களிடம் எதிர்ப்பார்க்காதீர்கள் தோழர்களே!
-Ganesh Babu

கருத்துகள் இல்லை: