
நிலையில் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக இருந்த இவர், மூன்று வருடங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இருந்தவர் சக்திகாந்த தாஸ்.
சக்திகாந்த தாஸ் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பொருளாதார விவகாரங்களின் செயலராக இருந்தவர். மேலும் ரிசர்வ் வங்கியுடன் நெருக்கமாக பணிபுரிந்துள்ளார்.
தமிழக அரசின் தொழிற்துறையின் செயலராகவும், தமிழக காகித நிறுவனத்தின் (டி.என்.பி.எல்) தலைவர் மற்றும் இயக்குநர், டைட்டன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர், தமிழ்நாடு பெட்ரோ பிராடக்ஸின் தலைவர், மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவர், எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் தலைவர், இந்தியன் வங்கியின் கெளரவ தலைவர், தென்னிந்திய பெட்ரோலிய தொழிற்துறை கழகம் மற்றும் வெடிப்பொருள் துறையின் இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக