திங்கள், 10 டிசம்பர், 2018

வரலாறு காணாத ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. தப்பி ஓடும் அதிகாரிகள்..

Gnana Suriyan Munisamy : இவர்கள் அனைவரும் ஏதோ சாதிக்க போகிறோம் என்று
உள்ளே வந்தார்கள்.
திட்டக்குழு, உச்ச நீதிமன்றம், சிபிஐ, என்று தொடர்ந்து இப்போது ரிசர்வ் வங்கி என்று அரசியல் நிறுவனங்களாக மாற்றப்படுவதற்கான வேலைகளை மோடியும் அமுக்கிசாவும் செய்து விட்டார்கள். எப்படியும் ஒரு பெரும் போராட்டம் காத்திருக்கிறது.

viduthalai.in- வீ. குமரேசன்;நேற்றைய தொடர்ச்சி..

உலக வங்கி (World Bank) மற்றும் பன்னாட்டு நிதில் (International Monetary Fund) வாங்கிய வளர்ச்சிக் கடன்களின் மதிப்பு அதிகமாவதோடு, நமது நாடு செலுத்த வேண்டிய கடன் தவணைத் தொகையும் இந்திய ரூபாயில் அதிகரிக்கும். ஒட்டு மொத் தமாக ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கக் கூடிய வகையில் விலைவாசி ஏற்றமும், நாடு செலுத்த வேண்டிய ஒவ்வொரு குடிமகனின் கடன் அளவும் அதிகரிக்கும் அவல நிலை உருவாகும். தற்போதைய (10.09.2018) நில வரப்படி ஒரு அமெரிக்க டாலருக்குச் சமமான ரூபாயின் அளவு வரலாறு காணாத வகையில் 72.18 ஆக உயர்ந்து மதிப்பு வீழ்ச்சி அடைந் துள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு வெளிநாட்டுப் பொருளாதார நிலைமையை - குறிப் பாக துருக்கி நாட்டு பொருளாதார மாற்றங்களே காரணம் என பிறர் மீது பழிபோட்டு விட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது பா.ஜ.க அரசு. பொருளாதாரத் தேக்க நிலையினைச் சரி செய்திட எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல், கடைப்பிடித்து வரும் தவறான போக்கினையே பிடிவாதமாகக் கடைப்பிடித்து இந்திய நாணய மதிப்பை உலக அரங்கில் மேலும் வீழ்ச்சி யடைவதற்கான வேலைகளைத்தான் இன்னும் மோடி அரசு செய்து வருகிறது.
உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product)  கணக்கீடு
பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து கடைசி ஆண்டு நடைபெறும் நிலையில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்தது. காங்கிரசு தலைமையிலான ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance) ஆட்சியில் நிலவிய பொருளாதார வளர்ச்சியை விடக் குறைந்த அளவிலே தொடர்ந்து வந்தது.
2019 இல் மறுபடியும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர இருக்கின்ற சூழலில் வளர்ச்சியைக் காட்ட வேண்டும் எனும் ஆதங்கத்தில் உள் நாட்டு மொத்த உற்பத்தியைக் கணக்கிடும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. கணக்கீடு முறையின் அடிப்படை ஆண் டையே மாற்றி உருவாக்கப்பட்ட கணக்கீட்டு முறை யால் நடப்பு ஆண்டின் (2018-19) உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதமானது முதல் காலாண் டில் (ஏப்ரல்-ஜூன் 2018) 8.2 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள் ளது. கடந்த காலங்களில் மிகவும் குறைவாக இருந்த  உற்பத்தி அளவு திடீரென 8.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியே,  நடப்பு ஆண்டில் உள்நாட்டுப் பொருள் உற்பத்தி 7.5 விழுக்காடாகவே இருக் கும் என்று முன்னர் அறி விப்புச் செய்திருந்தது. பன்னாட்டு நிதியமும்  7.2 விழுக் காடாகவே இருக்கும் என முன் மதிப்பீடு செய்திருந்தது. இருப்பினும் அரசு வெளியிட்ட புள்ளி விபரம் 8.2 விழுக்காடு என்கிறது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee)  உறுப்பினர் ஒருவர், உள்நாட்டு பொருள் உற்பத்தி திடீரென உயர்ந்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
'தொழில் உற்பத்தித் துறையும் மந்தமாக உள்ள பொருளாதாரச் சூழலில் உள்நாட்டு பொருள் உற்பத்தி அதிகரித்தது எப்படி?' என வினா எழுப்பியுள்ளார். பொருளாதார அறிஞர் களின் விமரிசனம், எதிர்கட்சியினரின் கருத் துகள்-விமரிசனம், எப்படி இருந்த போதிலும் ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிலவிய உள்நாட்டு பொருள் உற்பத்தி விகித அளவிற்கு பெருக்கம் உள்ளது என புள்ளி விவரம் காட்டுவது போதும் என பா.ஜ.கட்சி ஆட்சி நினைக்கிறது.  ஏட்டுச் சுரைக்காயைச் சமைத்துச் சாப்பிட முடியாது. வெறும் புள்ளி விவர வளர்ச்சியால் நாட்டுப் பொருளாதாரம் மேம்பட்டு விட முடியாது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு:
மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருள்களில் உணவுப் பொருளுக்கு அடுத்த படியாக பயன்பாட்டு நிலையில் இருப்பது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண் ணெண்ணெய் ஆகும். உணவுப் பொருள் நுகர்வு பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்தது.  பெட்ரோல், டீசல் பொருட்களின் நுகர்வு வெளிநாட்டு இறக்கு மதிப் பொருளான கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு அன்றாடம் அவைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. வரிச் சீர்திருத்தம் என்பதன் பெயரால் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (GST)  விதிப்பிலிருந்து பெட்ரோல், டீசல் விலைக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
முந்தைய அரசின் ஆட்சி காலங்களில் கச்சா எண்ணெயின் விலையானது உலகச் சந்தையில் உயர்வாக இருந்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருளுக்கு அரசே மானியம் வழங்கி பெட்ரோல், டீசல் விலை களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு பெட்ரோல், டீசல் பொருள்களுக்கு வழங்கப்பட்ட அரசு மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கு மானியமும் இல்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீது மத்திய, மாநில அரசுகளின் தனித்தனி வரி விதிப்பும் சேர்ந்து விலைச் சுமையை அதிகரித்து வருகின்றன.
2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபொழுது உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 145 டாலராக இருந்த நிலையில் நம் நாட்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.60; டீசலுக்கு ரூ.45 என்ற அளவிலேயே இருந்தது. தற்பொழுது 2018 -இல் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 70 டாலர் என பாதிக்கு மேல் குறைந்துவிட்டது.
இன்றைய (16.9.2018) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.85.24.  டீசலின் விலை ரூ.78.02.  உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்த பொழுது, இங்கு பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்தது. உலகச் சந்தையில் விலை பாதியாகக் குறைந்த பொழுது உள்நாட்டு விலை பாதியாகக் குறைந்து இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் பெட்ரோல், டீசலின் விலை கட்டுக்குள் அடங்காமல் ஏறிக்கொண்டே வருகிறது. இதுதான் மோடி தலைமையிலான அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை. வளர்ச்சி என்பதன் பெயரால் ஆட்சிக்கு வந்த பா. ஜ.க. அரசு இன்று சாமானிய மக்களையும் அல்லலுக்கு ஆளாக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப் படுத்திட முடியாமல் தவித்து வருகிறது. மத்திய அரசு விதிக்கின்ற கலால் வரியின் அளவினைக் குறைத்தாவது ஓரளவிற்கு விலையினைக் குறைக்க முடியும். மாறாக, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் குறைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி வருகிறது.
ஒட்டு மொத்தமாக, பொருளாதார மேம் பாட்டு நடவடிக்கைகளைப் பொறுத்த அளவில் மோடி அரசு எடுத்த முடிவுகளெல்லாம் தோல்வி அடைந்து வருகின்றன. தோல்வி மட்டுமல்லாமல் எதிர்மறை விளைவுகளை உருவாக்கி மக்களை இன்னல்படுத்தி அல்ல லுக்கு ஆளாக்கி வருகின்றன. ஆளும் திற னற்ற, ஆளும் நாணயமற்ற மோடி அரசானது எந்த வகையான வளர்ச்சிக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாகவும், நடப்பு ஆண்டிலும்  ஏதும் செய்திடவில்லை. மேல்மட்ட அரசு முடிவு களின் விளைவு அடித்தட்டு மக்களையும் பாதிக்கும் தொடர் நிலையில் வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் (2019) - பா.ஜ.க அரசுக்கு விடை கொடுக்கும் வகையில் மக்கள் தங்களின் வாக்குரிமையினை பயன்படுத்து வதே நாட்டு  வளர்ச்சிக்கு வித்திடாவிட்டாலும், தொடரும் துயரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற வகையில் சரியான செயலாக அமையும்.

கருத்துகள் இல்லை: