
tamil.oneindia.com - shyamsundar. ;ம ஜகர்த்தா:
இந்தோனேஷியாவில் சுனாமியின் போது விமான பயணிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக
வேலை செய்த நபர் மாரடைப்பு வந்து மரணம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பெயர் அந்தோனியஸ் குணவான் ஆகுங் ஆகும்.
இந்தோனேஷியாவில்
சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை
இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு
இருக்கிறது.
பெரிய சுனாமி<
இந்த
நிலநடுக்கம் காரணமாக பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர்
அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் சுனாமி
ஏற்பட்டது. இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840பேர் பலியாகி
உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை
அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
யார் இவர்
இந்த
நிலையில் இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட ''பாடிக்'' நிறுவன விமானத்தை
அந்தோனியஸ் குணவான் ஆகுங் என்ற நபர் காப்பாற்றியுள்ளார். இந்த விமானம்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுலசேஸி தீவில் இருந்து புறப்பட்டு இருக்கிறது.
அங்கு அப்போது விமான நிலைய ஏர் டிராபிக் இயக்குனராக அந்தோனியஸ் குணவான்
ஆகுங் இருந்துள்ளார்.
என்ன துணிச்சல்
சரியாக
இந்த விமானம் எடுக்கப்பட வேண்டியதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன் அங்கு
நிலநடுக்கம் வந்துள்ளது. இதனால் இவருடன் பணியாற்றிய மற்ற இயக்குனர்கள்
எல்லோரும் வெளியே பாதுகாப்பு கருதி சென்று இருக்கிறார்கள். ஆனால் இவர்
எதற்கும் அஞ்சாமல் தைரியமாக அந்த விமானம் பறக்க கீழே இருந்து வழி காட்டி
இருக்கிறார்.
என்ன செய்தார் இவர்
நிலநடுக்கம்
ஏற்பட்டு இருக்கும் நிலையிலும் விமானம் முழுதாக பறக்கும் வரையில்
வழிகாட்டி இருக்கிறார். உள்ளே 220 பயணிகள் இருந்துள்ளனர். ஆனால் விமானம்
புறப்பட்ட பின் வேகுவேகமாக படிகளில் இறங்கி கீழே வந்துள்ளார். ஆனால் கீழ்
இறங்கும் போதே தடுக்கி இவர் கால் உடைந்துள்ளது.
இறந்தார்
அதே
சமயம் நிலநடுக்கம் காரணமாக இவர் அதிர்ச்சிக்கு உள்ளாகி, மாரடைப்பு வந்து
மரணம் அடைந்தார். விமான நிலையத்திற்கு கீழேயே இவர் மரணம் அடைந்தார்.
அதன்பின்பே இவர் நிலநடுக்கம் நின்று மருத்துவமனைக்கு அழைத்து
செல்லப்பட்டார். ஆனால் இவர் பல மணி நேரம் முன்பே இறந்துவிட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது ஹீரோயிச செயலுக்கு மக்கள் வரவேற்பு
அளித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக