
தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முனையும்போது, மக்களின் கொந்தளிப்புக்கு ஆளாக நேரிடும். அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சி தயாராக உள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசும்போது, ‘கமல்ஹாசன் சினிமாவில் முதல் இன்னிங்சிலும், அரசியலில் இரண்டாவது இன்னிங்சிலும் கால் வைத்துள்ளார்’ என்று கூறிய கருத்து பற்றி கமலிடம் கேட்டதற்கு, ‘காந்தி முதல் இன்னிங்சை ஆப்பிரிக்காவிலும், இரண்டாவது இன்னிங்சை இந்தியாவிலும் கால் வைத்தார். எனவே யார் எப்படி வருகிறார்கள் என்பது முக்கியம் அல்ல. அவர்கள் வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். ஆளும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் செயல்படாத ஆட்சியாக உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் எங்கே பதவி பறிபோய்விடுமோ என்ற ஆதங்கத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசுகிறார். அவர் பேசுவதற்கு நான் வேண்டுமானால் டிக்ஷனரி கூட வாங்கி தர தயாராக இருக்கிறேன். அதை படித்து பார்த்து விட்டாவது பேசட்டும்’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக