ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குஜராத் சூரத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ... உடலில் 86 காயங்கள்


தினமலர்.:சூரத்: கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்களின் சோகம் மறையாத நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரி்ல் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் பஹிஸ்தான் என்ற புறநகர் வயகாட்டில் 9 வயது சிறுமி பிணமாக கடந்த 6ம் தேதி போலீசாரால் மீட்கப்பட்டார். அவரது உடலில் 86-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்தன. கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளம் இருந்தது. அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் கதுவா,உ.பி.யில் உன்னாவ் ஆகிய இடங்களில் நடந்த பலாத்கார சம்பவங்கள் நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள நிலையில் குஜராத்தில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: