வியாழன், 19 ஏப்ரல், 2018

பெண்களை மதியுங்கள் - வெங்கையா நாயுடு உருக்கம்

மாலைமலர் :அரியானா மாநிலத்தின் குருசேத்ரா பல்கலைக்கழக விழாவில்
பங்க்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், பெண்களை மதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பாரம்பரியத்தை பின்பற்றுங்கள், பெண்களை மதியுங்கள் - வெங்கையா நாயுடு அறிவுரை சண்டிகர்: அரியானா மாநிலத்தின் குருசேத்ரா நகரில் உள்ள குருசேத்ரா பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியர்கள் தங்களது நாட்டை பாரத மாதா என அழைத்து வருகின்றனர். விகடனில் வெளிவந்த கவர்னரின் நிகழ்வில் புகைப்படத்தில் சிறுமியின் மீது கவர்னரின் கை இருக்கும் இடம் ..(சிறுமியின் முகம் அவரின் பிரைவசி கருதி மறைத்துள்ளேன்)
இந்தியாவில் ஓடும் கோதாவரி, கங்கா, யமுனை உள்ளிட்ட பெரும்பாலான நதிகள் பெண்கள் பெயரையே கொண்டவை.விகடனில் வெளிவந்த கவர்னரின் நிகழ்வில் புகைப்படத்தில் சிறுமியின் மீது கவர்னரின் கை இருக்கும் இடம் .. (சிறுமியின் முகம் அவரின் பிரைவசி கருதி மறைத்துள்ளேன்) அறிவுக்கு சரஸ்வதியையும், வீரத்துக்கு துர்காவையும், செல்வத்துக்கு லட்சுமி தேவியையும் வைத்து வழிபட்டு வருகிறோம். பாரம்பரியத்தை போற்றி நடந்து வரும், பெண்களை மதித்து வரும் நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது வெட்கக் கேடாக உள்ளது. மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தியாவின் பெருமையை உலகறிய செய்ய முன்வரவேண்டும். பெண்களை மதித்து நடக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: