செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தமிழக ஆளுனர் .. ஏற்கனவே அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருந்தன

DMK RS MP Kanimozhi, reacts to TN Governor Banwarilal's inappropriate behaviour with a woman journalist during the press meet today. Kanimozhi, in her tweet says, "Even if the intention is above suspicion, a person who holds a public office has to understand that there is a decorum to it and violating a woman journalist’s personal space does not reflect the dignity or the respect which should be shown to any human being"
Purohit
முதல்வர் மரணத்துக்கு 3 மாதம் கழித்து விசாரணை கமிஷன் அமைத்த மாநிலத்தில், இந்த பாலியல் வழக்கிற்கு மட்டும் ஒரே நாளில் விசாரணை கமிஷன்
Shankar A : பாத்ரூம் பன்வாரிலால்.
N.D.Tiwari
பன்வாரிலால் தமிழக ஆளுனராக பதவியேற்றது முதலாகவே, அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருந்தன. 26 பிப்ரவரி அன்று டெல்லியிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் பத்திரிக்கையும், மறுநாள் டைம்ஸ் ஆப் இந்தியா இதழும், பாலியல் சர்ச்சையில் தென்னக ஆளுனர் என்று பெயர் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டிருந்தது. பத்திரிக்கையாளர்கள் அந்த செய்தி வெளியான அன்றே அதை விசாரித்து, அந்த ஆளுனர் பன்வாரிலால்தான் என்பதை உறுதி செய்தோம்.
கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ உரையாடல் பன்வாரிலால் மீதான புகார்களை உறுதிப் படுத்தியது. அந்த உரையாடலில் கவர்னர் குறித்த பகுதி இதுவே “உங்களுக்கு கவர்னர் வர வீடியோலாம் அனுப்பி வெச்சுருக்கேன்ல. அதுல சில விஷயம் நடந்தது. அது நடுவுல ஸ்க்ரீன் இல்லாம இருந்தது. கவர்னர் லெவல்தான். கவர்னர் தாத்தா இல்லை. கவர்னர் மீட்டிங்கில் எந்த அளவுக்குப் பக்கத்துல இருந்து வீடியோ எடுத்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். அந்த அளவுக்கு எனக்கு மூவ் பண்ண அனுமதி கொடுத்திருக்காங்க.”
இந்த சூழலில்தான் இன்று பன்வாரிலால், பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். ஆளுனர் பதவி என்பது, நீதிபதிக்கு நிகரான பதவி. அவர்கள் அரசியல்வாதிகள் போல செயல்படக் கூடாது. ஆனால், பாத்ரூம்களை ஆய்வு செய்யும் பன்வாரிலால் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.

பெரும்பாலான முன்னணி ஊடகத்தின் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். தி வீக் வார இதழின் செய்தியாளர் லட்சுமியும் அதில் ஒருவர். பத்திரிக்கை சந்திப்பு இறுதிக் கட்டத்தை எட்டியபோது, லட்சுமி, பன்வாரிலாலிடம், உங்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பவர் யார், மாநில அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது என்று கூறியுள்ளீர்கள். அதே நேரத்தில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா ? என்று கேட்கிறார்.
இதற்கு பன்வாரிலால் பதிலளித்திருக்கலாம். பதிலளிக்க மறுத்திருக்கலாம். பத்திரிக்கையாளர் சந்திப்பு நிறைவடைந்தது என்று தெரிவித்திருக்கலாம். ஆனால் இது எதையுமே செய்யாமல் கேள்வி கேட்ட லட்சுமியின் கன்னத்தை தட்டிக் கொடுக்கிறார்.
அருவருப்படைகிறார் லட்சுமி. பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்ததும், தன் எரிச்சலையும், கோபத்தையும் ட்வீட்டுகளில் வெளிப்படுத்துகிறார் லட்சுமி.
எந்த பெண்ணுக்கும் தொட்டுப் பேசுவது பிடிக்காது. ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள், நெருங்கிய நண்பர்களைத் தவிர, வேறு யாரும் தொட்டுப் பேசுவதை பெண்கள் ஒரு போதும் விரும்புவதில்லை.
அப்படி இருக்கையில் ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பவர் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளரை தொட்டுப் பேசுவதை எப்படி ஒரு பெண் ரசிப்பார் ? அதுவும் இது சாதாரணமான பத்திரிக்கையாளர் சந்திப்பு கிடையாது. பன்வாரிலால் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் நடக்கும் ஒரு சந்திப்பு.
இப்படிப்பட்ட சூழலில் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவும் இந்த நபர் எப்படிப்பட்ட கீழ்த்தரமானவனாக இருப்பான் ?
யார் கொடுத்தது இந்த உரிமையை இவனுக்கு ? பொது வெளியில், கேமராக்கள் முன்னிலையில், இந்த வேலையை செய்யும் இவன், தனிமையில் என்ன செய்வான் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
வயதை காரணம் காட்டி கூறப்படும் சப்பைக் கட்டுகளை ஏற்க முடியாது. பன்வாரிலால் தமிழகத்திலிருந்து விரட்டப்பட வேண்டிய ஒரு நபர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை: