புதன், 18 ஏப்ரல், 2018

எச்ச .ராஜா கனிமொழி பற்றி கேவலமான ட்வீட் .. திமுகவினர் கடும் கண்டனம்

H Raja ✔ @HRajaBJP  : தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே. 
 Mayura Akhilan - Oneindia Tamil : சென்னை: ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை பொறுக்க முடியாமல், எச் ராஜா போட்டுள்ள அசிங்கமான ட்வீட்டுக்கு இணையதளத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 
திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாளையும், மகள் கனிமொழியையும் இழிவுபடுத்தியுள்ளது இந்த டிவீட். ஆனால் திமுக தலைமை இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்காமல் அமைதி காப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சர்ச்சைக்குரிய ட்வீட் போட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் எச் ராஜா, இன்று போட்டுள்ள ஒரு ட்வீட் மகா மட்டகரமானதாக உள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் இவர் இப்படி தரம் தாழ்ந்து இந்த அளவுக்கு கீழே போயிருப்பது வியப்பை அளிக்கவில்லை. காரணம் அவர் சார்ந்த கட்சி அப்படி. கேள்வி கேட்பார்களா? தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா.
மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே. கொந்தளிப்பதா? 
 10 ம் வகுப்பு கூட படிக்காத ஒருவர் தன் பேருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக் கொள்ள விரும்பிய அல்ப ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் உதயக்குமாரை கொலை செய்த குடும்பம் இன்று கொந்தளிப்பது வேடிக்கை தான். 
நிர்மலா தேவி விவகாரத்திலும், பெண் நிருபர் கன்னத்தை ஆளுநர் தொட்ட விவகாரத்திற்கும் அறிக்கை வெளியிட்ட திமுக தலைமை, எச் ராஜாவை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லையே என்று திமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பினர். 
ஆர்.எஸ் பாரதி பதில் பதிவு இருப்பினும், எச் ராஜாவின் கேவலமான பதிவுக்கு அதைவிட கேவலமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார் திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி. 
மொத்தத்தில் நிர்மலா தேவி விவகாரம் எங்கேயோ ஆரம்பித்து எதை நோக்கியோ போய் கொண்டிருக்கிறது. கடந்த 3 தினங்களாக காவிரி போராட்டத்தையும், ஸ்டெர்லைட் போராட்டத்தையும் மறக்கடிக்கச் செய்து விட்டார்கள்.

கருத்துகள் இல்லை: