வியாழன், 19 ஏப்ரல், 2018

Child Abuse ஜெயின் துறவியாக வைர வியாபாரியின் 12-வயது மகன்

இந்த சிறுவனுக்கு வாழ்க்கையை பற்றி என்ன தெரியும் ? ஏதோவொரு கார்னிவல் அல்லது பிறந்தநாள் விழா போன்று இதையும் எண்ணிக்கொண்டு இருக்கிறார், அதுவும் அல்லாது வீட்டில் அல்லது வழிபாட்டு தலங்களில் உள்ள மதவாதிகள் இது போன்ற சிறுவர்களை மூளை சலவை செய்து தங்கள் மத சாயங்களை அப்பாவி சிறுவர்களின் மனங்களில் விதைத்து விடுகின்றனர் . இது ஒரு Child Abuse தான் .
ஜெயின் துறவியாக மாறிய வைர வியாபாரியின் 12-வயது மகன்மாலைமலர் :குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 12-வயது மகன் உலக வாழ்வை துறந்து ஜெயின் துறவியாக மாறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #BhavyaShah அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் திபேஷ் ஷா வைர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், திபேஷின் 12-வயது மகன் பவ்யா ஷா தனது உலக வாழ்விலிருந்து வெளியேறி துறவு மேற்கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற விழாவில் பவ்யாவிற்கு 450 ஜெயின் துறவிகள் முன்னிலையில் தீட்சை வழங்கப்பட்டது. இவ்விழாவில் 7 ஆயிரம் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய பவ்யா ஷா, 'துறவியாக மாறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இது தான் சரியான பாதை என என் பெற்றோர் கூறியுள்ளனர். விரைவில் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த பாதையை பின்பற்றுவர்' என கூறினான்.

12 வயது சிறுவன் ஜெயின் துறவியாக மாறியிருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறு வயதில் துறவரம் மேற்கொண்ட பவ்யா ஷாவின் எண்ணத்திற்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்

கருத்துகள் இல்லை: