செவ்வாய், 25 செப்டம்பர், 2018

பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கரின் உயிருக்கு வைகுண்டராஜனாலும் சவுக்கு சங்கராலும் ஆபத்தாம்..

Shankar A : கோலமாவு சந்தியா என்ற கட்டுரையில், பத்திரிக்கையாளர் என்று
தன்னை அழைத்துக் கொள்ளும், சந்தியாவும், முன்னாள் டிஜிபி ராமானுஜமும், சந்தித்த சிசிடிவி பதிவுகளை வெளியிட்ட நாள், 27 ஆகஸ்ட் 2018.
https://www.savukkuonline.com/15291/
ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிறது. ஆனால், நேற்று, தன் உயிருக்கு வைகுண்டராஜன் மற்றும் சவுக்கு இணைய தளத்தால் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறையில் புகார் அனுப்பியுள்ளார்.
அது எப்போது ? அடுத்த சிசிடிவி பதிவை வெளியிடுவேன் என்று ட்விட்டரில் அவரிடம் நேரடியாக தெரிவித்த பிறகு.
வைகுண்டராஜனிடம் எனக்கு பிடித்த விஷயம், என்னிடம் ஒரு முறை கூட பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்யவில்லை என்பதுதான். ஆளை தூக்கலாம் என்று நான் பொது வெளிக்கு வருவதற்கு முன்பு, என்னைப் பற்றி விசாரித்து, என்னை தூக்கலாம் என்ற முடிவை கைவிட்டதோடு, என்னிடம் இந்நாள் வரை பேச்சுவார்த்தை நடத்த முயலவேயில்லை.
அந்த வைகுண்டராஜனோடு நான் கைகோர்த்துக் கொண்டு, நான் கோலமாவை கொலை செய்ய முயற்சி செய்கிறேன் என்ற குற்றச்சாட்டு எத்தனை அயோக்கியத்தனமானது ?

முதல் கட்டுரை வெளியிட்ட மறுநாள், இந்த புகாரை சந்தியா தெரிவித்திருக்க வேண்டும்தானே ? அடுத்த வீடியோவை வெளியிடுவேன் என்று சொன்ன பிறகு, இப்படி ஒரு புகாரை வெளியிடுவதற்கான காரணம், மனநோயாளி ராமானுஜம் என்பது எனக்கு தெரியாதா ?
Grow up Sandhya. I have seen worst fellows than you. You are a kid. Try to grow up.

கருத்துகள் இல்லை: