சனி, 29 செப்டம்பர், 2018

ஒட்டு மெஷின் தில்லுமுல்லு . எதை அமுக்கினாலும் பாஜகவுக்கே .. 2019 பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம்?

   m.dailyhunt.in :டெல்லி , டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் முதன் முறையாக வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அதில் மோசடி செய்து பாஜக மாணவர் அணியான ஏபிவிபி வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்திய தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் வியாழனன்று நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஏபிவிபி தலைவர், மற்றும் துணைத்தலைவர், துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் செயலாளர் பதவிக்கு மட்டும் காங்கிரஸ் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.



அதே நேரம் ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இதில் எந்த அமைப்பும் வெற்றி பெறாத வகையில் வாக்கு இயந்திரத்தின் மூலம் மோசடி செய்திருக்கின்றனர்.இது மாணவர்கள் மத்தியல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 80 சதவிகிதமான மாணவர்கள் ஏபிவிபிக்கு எதிராக வாக்களித்திருக்கும் போது எப்படி ஏபிவிபி வெற்றி பெற்றது? மேலும் செயலாளர் பதவிக்கே ஏபிவிபிக்கு எதிரான சங்கம் வெற்றி பெறும் போது எப்படி தலைவர் பதவியில் தோல்வியுற்றிருக்க முடியும் என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.



இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்திருக்கலாம் என தில்லி மாணவர்கள் சந்தேகத்தை எழுப்பினர்.
மேலும் மறுதேர்தல் நடத்த வேண்டும். ஓட்டு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் என இடதுசாரிமாணவர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதே போல் காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி கட்சி மாணவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. ஆனால் டெல்லி பல்கலைக்கழகம் தேர்தல் அதிகாரிகள் மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
இந்த செய்தி தில்லி பத்திரிகைகளில் வந்தவுடன். அதிர்ச்சியடைந்த இந்திய தேர்தல்ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்போது தில்லி பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது என்ற துறை ரீதியான உள் விசாரணையில் ஈடுபட்டது. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது..




இதையடுத்து மேலும் அதிர்ச்சியடைந்த இந்திய தேர்தல் ஆணையம், ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம்தான் வழங்கியது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. மாநில தேர்தல் ஆணையத்திடம் இதுபோன்ற வாக்குப் பதிவு இயந்திரங்களே இல்லை. இந்த இயந்திரங்களை டெல்லி பல்கலைக்கழகம் தனியாக வாடகைக்கு வாங்கி உள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தில் மூத்த அதிகாரிகள் தற்போது யாரும் இல்லை என்பதால் இந்த விவகாரம் குறித்து பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும் ' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியார் யாரும் தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் வாக்குப்பதிவு இயந்திரம் தயாரித்தது எப்படி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் இதற்கு முன்பு நடைபெற்றிருக்கும் தேர்தலில் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்குபதிவு இயந்திரம் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இந்த நிகழ்வின் மூலம் வாக்குஇயந்திரத்தின் மூலம் ஏபிவிபி தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் யாரின் உத்தரவின் பேரில் யாரிடம் வாக்கு இயந்திரம் பெறப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை மாணவர்கள் எழுப்பி வருகின்றனர்.பிஜேபி செய்த மோசடித்தனம் இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
DINASUVADU

கருத்துகள் இல்லை: