வெள்ளி, 28 செப்டம்பர், 2018

தேனியில் 12 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை ... படுகொலை


விசிக-ரிச்சர்ட் :
தேனி அல்லிநகரத்தை சார்ந்த ராஜா என்பரின் மகள் 7-ம் வகுப்பு படிக்கும் 12
வயது சிறுமி ராகவி. எந்த தவறும் செய்யாத இந்த குழந்தை ஆனந்த் என்பவனின் காம வெறிக்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ய ஆனந்த் என்ற காம வெறியனுக்கு தைரியம் தந்தது என்ன? எந்த குற்றமும் செய்யாத ராகவி பிறந்த சமூகம் தான். தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூகமான அருந்ததியர் சாதியில் பிறந்தது தான் ராகவி செய்த குற்றமா? தட்டிக் கேட்க யாரும் வரமுடியாது தாழ்த்தப்பட்ட சமூகம் தானே என்ற சாதி ஆணவ சிந்தனை ஆனந்த் என்ற காம வெறியனுக்கு சிறுமி ராகவியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யும் துணிச்சலை தந்துள்ளது.
தகாத உறவுகளெல்லாம் இங்கு தகும் என சட்டம் அனுமதித்துள்ளது. தற்போது சட்டம் அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கவும் செய்கிறது. 497 சட்டம் நீக்கமெல்லாம் தவறு செய்யும் ஆண்களைத்தான் பாதுகாக்குமே தவிர, தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூகத்தில் பிறந்து காதல் கொண்ட இளவரசன், கோகுல்ராஜ் , சங்கர் போன்ற ஆண்களை படுகொலையில் இருந்தும் பறிபோகும் பெண்களின் வாழ்க்கையையும் பாதுகாப்பது இல்லை.


சிறுமி ராகவி தந்தை ராஜா தன் மகளை படுகொலை செய்தவன் ஆனந்த் என்று புகார் அளித்தும் குற்றவாளியை தப்புவிக்கும் படியாக காவல்துறை சந்தேக மரணம் என்று குறிப்பிட வற்புறுத்தியுள்ளது இதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் சில பொது உடைமை இயக்கங்கள் சிறுமி ராகவிக்கு ஆதரவாக 1000 கணக்கில் மக்களை திரட்டி தேனி திண்டுக்கல் சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் குற்றவாளி கைது செய்யபடுவார் என்று உறுதி அளித்து அனுப்பி உள்ளது.

ஒரு சிறுமியை படுகொலை செய்யவும் பாலியல் வன்கொடுமை செய்யவும் காதல் செய்பவர்களை கொலை செய்யவும். பெண், ஆண், குழந்தைகள் என்று அனைவரின் பாதுகாப்பினை சிதைக்கும் சாதி ஒழிக்கப்பட வேண்டும் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

- விசிக-ரிச்சர்ட்

கருத்துகள் இல்லை: