பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை 58000கோடி அதாவது 7.8 பில்லியன் யூரோ விற்கு வாங்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு அனில் அம்பானியின் Reliance Defecne நிறுவனத்தை மோடி அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண்டே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
மொத்தமுள்ள 58000 கோடியில் அனில் அம்பானிக்கு 51% பங்கும், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திற்கு 49%பங்கும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு லஞ்சமாக பிரான்ஸ் அதிபரின் பாட்னரும், நடிகருமான ஜூலி ஹையட்டிற்கு படம் தயாரித்து கொடுத்துள்ளது அனில் அம்பானியின் Reliance Entertainment நிறுவனம்.
ரபேல் ஒப்பந்தம் பேசப்பட்ட 10 ஆவது நாளில், அதாவது ஜனவரி 24 ஆம் தேதி, அனில் அம்பானியின் Reliance Entertainment நிறுவனம், ஹையட்டின் நிறுவனத்துடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஹையட் என்பவர் பிரான்ஸ் அதிபராக இருந்த ஹோலண்டேவின் பாட்னர் ஆவார்.
இந்த ஒப்பந்தம் போடப்பட்ட 2 நாட்களுக்கு பிறகே அதாவது ஜனவரி 26 ஆம் தேதி, 2016 யில் தான் ரபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அம்பானி தயாரித்த அந்த படத்தின் பெயர் “Tout La Haut”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக