
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் போட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கருணாசுக்கு எழும்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கருணாஸ் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதற்கு ஐ.பி.எல். வழக்கு தடையாக உள்ளது. ஐ.பி.எல். போட்டியின்போது வன்முறையை தூண்டியதாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் கருணாஸ் மீது 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் ஜாமீன் வழங்குவது குறித்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக