ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஸ்டாலினை சந்தித்த 103 வயது மூதாட்டி ரங்கம்மாள்.. இருப்பதிலேயே சீனியர் இவர்தான்


திமுக தலைவர் ஸ்டாலினை அக்கட்சியின் மூத்த உறுப்பினரான ரங்கம்மா பாட்டி நேரில் சந்தித்து ஆசி வழங்கினார்.
 திராவிட முன்னேற்ற கழகம்  ஆரம்பித்து 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  பல போராட்டங்களை கண்ட கட்சியாக பல்வேறு சாதனைகளையும், வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளையும் எடுத்து ஒரு பாரம்பரிய அந்தஸ்தை பெற்றுள்ளது.
திமுக. சீனியர் அன்பழகனா?
முழுமையாக 50 ஆண்டுகள் தன் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி கலைஞர்  வார்ப்பித்த கட்சிதான் திமுக. இந்த கட்சி ஆரம்பித்து 70 ஆண்டுகள் என்றால் இந்த கட்சியில் இருப்பவர்களின் வயது நிச்சயம் அதைவிட அதிகமாகத்தான் இருக்கும்.
 அப்படிப்பார்த்தால் இப்போதைக்கு அன்பழகன்தான் கட்சியின் மூத்தவர். கலைஞரை விட 2 வயது பெரியவர்  ரங்கம்மாள் பாட்டி ஆனாலும் அன்பழகனை விட ஒருவர் இந்த கட்சியின் மூத்த உறுப்பினராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆமாம் அவரது பெயர் ரங்கம்மாள். வயது 103 ஆகிறது.
இவர்தான் இப்போதைக்கு இந்த கட்சியின் மூத்த உறுப்பினர். மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கம்மா இன்று அறிவாலயம் வந்தார். அங்கு திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ரங்கம்மாள் பாட்டி-ஸ்டாலின் சந்திப்பு அறிவாலயத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கம்மாள், “மறைந்த தலைவர் கருணாநிதியை என்னால் நேரில் வந்து அப்போது சந்திக்க முடியாமல் போய்விட்டது. அதனால்தான் இன்றைய திமுக தலைவர் ஸ்டாலினை சந்தத்து வாழ்த்து கூறினேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

பஞ்சாயத்து தலைவர் ஆனால் ரங்கம்மாள் பாட்டியை பார்த்தால் 103 வயது போல் தெரியவே இல்லை. நல்ல திடகாத்திரமாக இருக்கிறார். நினைவாற்றலுடன் பொறுமையாக பேசுகிறார்.
;தன்னுடைய ஊரில் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ரங்கம்மா, தேக்கம்பட்டி என்ற தன் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராம்!tamil.oneindia.com/ Hemavandhana

கருத்துகள் இல்லை: