வியாழன், 24 ஆகஸ்ட், 2017

எதிரிகளால் வெளிப்படையாக பிற்படுத்தப்பட்டவர்கள் மீதும், தலித்துகள் மீதும்..... Neet War,,,

Don Ashok: நீட் ஒருவகையில் நல்லது தான். எப்போதும் ட்ராஜன்களைப் போல ஒளிந்திருந்து தாக்கும் எதிரிகளால் வெளிப்படையாக பிற்படுத்தப்பட்டவர்கள் மீதும், தலித்துகள் மீதும் அறிவிக்கப்பட்டிருக்கும் போர் இது. நம்மில் தூங்கிக்கொண்டிருந்த எத்தனையோ கும்பகர்ணன்களை இது எழுப்பியிருக்கிறது. விபீஷ்ணர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி என்பது தங்களுக்கும் தங்கள் சாதிக்கும் மட்டுமே என கல்வி எனும் அடிப்படை உரிமையை பறித்துத் தின்று வந்த சாதி மீண்டும் அந்நிலையை உருவாக்க ‘நீட்’ஐ கையில் எடுத்திருக்கிறது. எங்கள் குழந்தைகளோ ஐம்பதாண்டுகளாகத்தான் படிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை தோற்கடிக்க இவ்வளவு பெரிய மோசடி வேலைகளைச் செய்திருக்கிறீர்கள். லட்சம் லட்சமாக கொடுத்து கோச்சிங் கிளாஸ் போனால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். எப்போது எங்கள் குழந்தைகளை ஏமாற்றித்தான் ஜெயிக்க முடியும் என நினைத்தீர்களோ அப்போதே நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.
இதுவரை ஐஐடியில் மட்டுமே உங்கள் ஆக்கிரமிப்பும், அராஜகமும் இருந்தது. எங்கள் குழந்தைகளுக்கு எம்.பி.பி.எஸ்சிலும், பொறியியலிலும் நியாயம் இருந்ததால் இதுவரை அவர்கள் ஐ.ஐ.டிக்காக பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஐ.ஐ.டி பக்கம் வரவுமில்லை. இனி அங்கும் வருவார்கள். அவர்களுக்குத் தேவை இது என்ன ஆட்டம் என புரிந்துகொள்வதற்கான கால அவகாசம் மட்டும்தான். அது இந்த ஓராண்டில் கிடைத்துவிடும். அப்புறம் பாருங்கள். செத்தீங்கடா....
-டான் அசோக்

கருத்துகள் இல்லை: