வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நீட் ... மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையதல்ல!: சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக நேற்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், வழக்கை இன்று ஒத்திவைத்து இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன், 'மருத்துவ இடம் கிடைக்காத மாணவர்கள் தவறாக முடிவெடுக்கக் கூடாது என்ற அக்கறை உள்ளது. இந்த விஷயத்தில் அரசை மட்டும் நாம் குறைகூற முடியாது. அவர்களும் தீர்மானம் செய்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றாததும், கற்பிக்கும் முறை மாற்றாததும் சிபிஎஸ்இ-யை தேர்வு நடத்தும் நிறுவனமாக நியமித்ததும் தான் இந்த நிலைக்கு காரணம்’ என்று கூறியிருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணையில், ‘நீட் தரவரிசை பட்டியலில் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்த பட்டியலை தனித்தனியாக சமர்ப்பிக்க கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் "9.3% மட்டுமே மாநில திட்டத்தில் படித்தவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.


10 ஆண்டுகளில் தமிழக அரசு செய்த தவறே மாநில பாடத்திட்ட மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம். நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை மறுப்பதற்கில்லை. இனிவரும் காலங்களில் 12ஆம் வகுப்பு பாடத்துக்கு படிப்பதற்கு பதிலாக நீட்-க்கு முழுமை தங்களை தயார்படுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களின் சந்தேகங்களை உடனடியாக போக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஆரம்பத்தில் நிராகரிக்காமல், கடைசி நேரத்தில் நிராகரித்த மத்திய அரசு நடவடிக்கை ஏற்க தக்கதல்ல" என கருத்து தெரிவித்தார். கலந்தாய்வில் இடம் கோரி மனுத்தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.நக்கீஎரன்

கருத்துகள் இல்லை: