தமிழக அரசியலில் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில் மன்னார்குடியில் பதற்றம் மேலும் அதிகரி்த்துள்ளது.
இன்று மதியம் திருவாரூர் அதிமுக (அ) மாசெ வாக திவாகரனின் ஆதரவாளரான எஸ்.காமராஜ் நியமிக்கப்பட்டதால் மாசெ வாக இருக்கும் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆதரவாளர்கள் தினகரனுக்கு எதிராக முழக்கமிட்டதுடன் கொடும்பாவியும் எரித்தனர். மேலும் கட்சி அலுவலகத்தை திவாகரன் தரப்பு கைப்பற்றிவிடக் கூடாது என்பதால் அமைச்சர் ஆதரவாளர்கள் பாதுகாப்புக்காக நின்றனர். இந்த நிலையில் திவாகரன் மற்றும் எஸ்.காமராஜ் ஆகியோர் சுமார் 20 காரில் நீடாமங்கலம் வரை சென்று ஊருக்கு திரும்பும் போது மன்னா்குடியில் அமைச்சர் வீடு முதல் நகரெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திவாகனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் வந்ததால் திவாகரன் தரப்பு மேலும் கொதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் தினகரனால் நியமிக்கப்பட்ட மாசெ எஸ்.காமராஜ் வீட்டில் திவாகரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த தஞ்சை புதிய மாசெ சேகர் சுமார் 30 கார்களில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதனால் மன்னார்குடியில் மேலும் பரபரப்பு தொற்றியுள்ளது. - இரா.பகத்சிங்நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக