கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழ் வழி பள்ளிகள் அதிகரித்து வருவதாக
கோலாலம்பூரில் நடந்த உலகத்தமிழ் இணைய மாநாட்டில் பேசிய மலேசிய
போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர் தெரிவித்தார்.உலகத்தமிழ்
காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்தும்
உலகத்தமிழ் இணைய மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் துவங்கியது.
மாநாட்டின் துவக்க விழாவில் மாநாட்டின் தலைவர் தானேஷ் பாலகிருஷ்ணன்
வரவேற்றார். ஆராய்ச்சி நிறுவன ஆலோசகர் உஷாதுரை, தமிழறிஞர் திருவள்ளுவர்
வாழ்த்தி பேசினர். மாநாட்டை வாழ்த்தி தினமலர் இணையதள தொழில்நுட்ப இயக்குனர்
ல. ஆதிமூலம் அனுப்பிய வாழ்த்து செய்தியை, இணையதள ஆலோசகர் இளங்கோவன்
வாசித்து வாழ்த்தி பேசினார்.
கற்றல் கற்பித்தல் மாநாட்டில்
மலேசிய போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர் எம்.கேவியஸ் பேசுகையில்: இந்த
மாநாடு இணையத்தையும், தமிழையும் கற்றல் கற்பித்தலில் இணைக்கும் முயற்சி
ஆகும். இது ஒரு தமிழ் திருவிழா. இது தமிழர்களின் அங்கீகாரத்திற்கு மேலும்
பெருமை சேர்க்கும். உலகத்தமிழர்கள் இடையே அன்பும், நட்பும் மேலும்
வலுவடையும். தமிழ் மொழியின் தட்டச்சு, மெய்நிகர் கல்வி, தொழில்நுட்பம்
மேலும் வளரும். கற்றல் கற்பித்தலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மாநாடு
மூலம் தமிழ் இணையத்தில் புரட்சியை ஏற்படுத்த முடியும். மலேசியாவில்527
தமிழ் வழி பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் புதிதாக 7 பள்ளிகள்
அமைக்கப்படடுள்ளன. அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் இந்த மாநாட்டின்
ஆய்வுக்கட்டுரை புத்தகம் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாடு நாளையும் (26 ம்தேதி ), நாளை மறுநாளும் ( 27 ம்தேதி) நடக்கவுள்ளது.
dandy - vienna,ஆஸ்திரியா சமீபத்தில் பர்மா.. ரங்கூனில் நடந்த தமிழ் மாநாட்டில் ...இந்தியாவில் இருந்து வந்த தமிழர் ஒருவர் பேசும்போது ..நல்ல தமிழை பேச ..இந்திய தமிழர்கள் பர்மாவில் வந்து பயிலவேண்டும் ..என்கிறார் ..50 வருடங்கள் பர்மா நாடு ..வெளியுலகத்தில் இருந்து தனிமை படுத்த பட போதிலும் ..மொழி ஆர்வம் அங்கு அதிகம் ..கூடவே ஜல்லி கட்டு ..கோலாடடம்..குரவை ..எல்லாம் முறையாக இங்கு நடை பெறுகின்றன ..தமிழ் நாட்டில் (???) dhinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக