புதன், 23 ஆகஸ்ட், 2017

தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுனரிடம் தனித்தனியே கடிதம் .. எடப்பாடிக்கான அரசுக்கு ஆதரவு மறுப்பு !

ஆதரவு வாபஸ் tamil.oneindia.com/mathi சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர். ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று தனித்தனியே கடிதம் தந்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் பழனிச்சாமி மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; முதல்வர் பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ.வாகிய நானும் நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆதரவு வாபஸ் ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் ஏற்கனவே அளித்த ஆதரவை இக்கடிதம் மூலம் திரும்பப் பெறுகிறேன். என்னுடைய இக்கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





ஊழலை ஊக்குவிக்கிறார்

ஊழலை ஊக்குவிக்கிறார் முதல்வர் நேர்மையற்றவராகவும் பாரபட்சம் காட்டக் கூடியவராகவும் இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழலை ஊக்குவிப்பதால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.




அதிகார துஷ்பிரயோகத்தை...

அதிகார துஷ்பிரயோகத்தை...

எடப்பாடி பழனிச்சாக்கான ஆதரவை வாபஸ் பெற்றாலும்கூட நான் அதிமுகவின் உறுப்பினரே. அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தும் வகையில்தான் ஆதரவை வாபஸ் பெறுகிறேன்.




ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் அதிகரித்துள்ளது. ஊழலை மறைக்கவே ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: