திங்கள், 21 ஆகஸ்ட், 2017

எடப்பாடியும் + பன்னீரும் இணைந்தார்கள் ஜெ., நினைவிடத்தில் மரியாதை!

நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிமுகவின் இரு அணிகளும் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அணிகள் இணைப்பை உறுதி செய்தனர். இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிமுகவில் 6 மாதங்களாக பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் தற்போது இணைந்தன. அமைச்சரவை பொறுப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.. >அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் இரு அணிகளும் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தன. அதிமுகவில் 6 மாதங்களால பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் தற்போது இணைந்தன. இதையடுத்து அதிமுக தலைமை கழகத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, தொண்டர்கள் விருப்பத்திற்கேற்ப அணிகள் இணைந்தன. கருத்து வேறுபாடுகள் காரணமாக 6 மாதங்கள் பிரிந்திருந்தோம். இனி எந்த தேர்தலையும் சமாளிப்போம். அணிகள் இணைப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.


என் மனதில் இருந்த பாரம் இன்றோடு அகன்றது. வருங்காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் வழியில் கட்சி, ஆட்சியை வழிநடத்துவோம். இரு அணிகள் இணையும் சூழலை ஜெயலிலிதா ஆன்மா தான் ஏற்படுத்தி கொடுத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிமுகவின் இரு அணிகளும் இன்று அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இணைந்துள்ளன அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் >ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

படங்கள் - அசோக்குமார்.நக்கீரன்&

கருத்துகள் இல்லை: