தேரா சச்சா சாமியார் பாபா ராம் ரஹீம் குற்றவாளி என சி பி ஐ நீதிமன்றம் தீர்ப்பு . கொலை பாலியல் வன்முறை ஆகியன சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணம் ஆகிறது ..
அரியானா: பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பை கண்டித்து அரியானா பஞ்ச்குலாவில் சாமியாரின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராம் ரஹீம் சிங்க்கு தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப், அரியானாவில் கலவரமாகியுள்ளது. வன்முறையை கட்டுபடுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்று கணக்கான பேர்
காயமடைந்துள்ளனர். 2 ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, குர்கானில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. வன்முறையை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் நடந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானிலும் கலவரம்:
ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதையடுத்து ராஜஸ்தானிலும் ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தீ வைத்துள்ளனர்.
டெல்லியில் கலவரம்:
டெல்லி: ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் சாமியார் சிங் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். டெல்லி ஆனந்த் விஹார் என்ற இடத்தில் 2 ரயில் பெட்டிகளுக்கு கலவரகாரர்கள் தீவதை்து எரித்துள்ளனர். தீவைத்த ரேகா விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீயில் எரிந்து கருகியுள்ளது.
செய்தியாளர்கள் மீது தாக்குதல்:
செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மற்றும் அவர்கள் வாகனங்கள் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராம் ரஹீம் சிங் சிறை சென்றார்:
பாலியல் வழக்கில் குற்றவாளி என நிருபிக்கப்பட்ட ராம் ரஹீம் சிங்கை நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு:
பஞ்சாப், அரியானா முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு உதவும் என்று 2 மாநில முதல்வர்களுக்கும் உறுதியளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக: பாலியல் புகார் வழக்கில் சிக்கிய சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டனை விவரம் ஆகஸ்ட் 28ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் யார்? தேரா சச்சா என்ற அமைப்பின் தற்போதைய தலைவராக இருப்பவர் குர்மீத் சிங் ஆகும். குர்மீத்-க்கு திருமணமாகிய 3 மகள்கள் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். ஒரு கட்டத்தில் குர்மீத் ராம் தன்னையே கடவுளாக சித்தரித்து கொண்டார். குரு கோபிந்த் சிங் போல் உடை அணிந்து நடித்ததால் சீக்கியர்கள் கோபத்திற்கு ஆளானார்.
அடுத்தடுத்து கொலை: பாலியல் புகாருக்கு பிறகு ரஹீம் ஆசிரமத்தைச் சேர்ந்த ரஞ்சித்சிங் கொலை செய்யப்பட்டார். ஆசிரம முறைகேடுகளை எழுதிய செய்தியாளர் ராம்சந்தர் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.
வழக்கு விவரம்: தேரா சச்சா என்ற அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் மீது 2002 ம் ஆண்டு பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் ராம் ரஹீம் மீது பாலியல் புகார் கொடுத்தார்.
ராம் ரஹீம் சிங் கைது: அரியானா சி.பி.ஐ. நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராம் ரஹீம் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்திற்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ராம் ரஹீம் சிங் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்து அரியானா சி.பி.ஐ. நீதிமன்றம் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் பஞ்சாப் ஹரியனா மாநிலங்களில் பதற்றம் நிலவியுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரசனை ஏற்படாமல் இருக்க பஞ்சாப் மாநிலங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை அடுத்து செல்போன், இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு நடவடிக்கையாக 201 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு குறி்ப்பிடத்தக்கது தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக