மின்னம்பலம் : கேரளாவில்
நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில்
பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீஸ் காவலில்
வைக்கப்பட்டிருக்கின்றனர். நடிகர் திலீப்புக்காகத்தான் இந்தக் குற்றத்தைச்
செய்தோம் என பல்சர் சுனில் போலீஸுக்குக் கொடுத்த வாக்குமூலத்தின்
அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டு அலுவா சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டிருக்கிறார். நேற்று (21.08.17) இவர்கள் இருவரும் நீதிமன்ற
விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த மொத்த குற்றத்துக்கும் பின்னணியில் ஒரு பெண் இருக்கிறார் என்று பல வாரங்களாக சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டு வந்தது. கேமராவைப் பார்க்கும்போதெல்லாம் இதே கதையைச் சொல்லிவந்த பல்சர் சுனில் இம்முறையும் அதையே சொல்லியிருக்கிறாரே தவிர, அந்தப் பெண் யார் என்பதை சொல்லவில்லை. M என்ற மேடம் ஃபோன் செய்து நான் செய்ய வேண்டியதைச் சொல்வார். அவரைப் பற்றி அடுத்தமுறை வரும்போது சொல்கிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டுச் சென்ற பல்சர் சுனிலை அவர் குறிப்பிட்டிருந்த ஆகஸ்டு 14ஆம் தேதி போலீஸ் தரப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை.
அதன் பிறகு அந்த மேடம் பற்றி பல்சர் சுனில் தொடர்ந்து பேசுகிறாரே தவிர அவர் யார் என்பதை சொல்லவேயில்லை.
மறுபுறம் திலீப்பால் ஜாமீனின் வெளிவர முடியவில்லை. தன்னால் இயன்ற எல்லா விதங்களிலும் ஜாமீன் மனுக்களை திலீப் தரப்பு நீதிமன்றத்திடம் கொடுத்தாகிவிட்டது. ஆனால், திலீப் ஜாமீனில் வெளியே சென்றால் இதுவரை கைப்பற்றப்படாத, சம்பவம் பதிவாகியிருக்கும் ஒரிஜினல் மெமரி கார்டு அடங்கிய செல்ஃபோன் ஆதாரத்தை அழித்துவிடக்கூடும் என்ற ஒரே காரணத்தை வைத்து போலீஸ் தரப்பு திலீப்பின் ஜாமீன் மனுவை உடைத்துவருகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக