வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நீதிபதி கர்ணன் மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த, சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அவர் நேரில் ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து, கர்ணனை கைது செய்து, ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க, உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.

தலைமறைவாக இருந்த கர்ணனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கர்ணனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  நீதிபதிகள், கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.நக்கீரன்

கருத்துகள் இல்லை: