அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அணியும் இணைகிற பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சூழலில் இரண்டு அணி நிர்வாகிகளூம் பாஜக தலைமையிடம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர்.
’தினகரன் தரப்பு அணி எதாவது குளறுபடி செய்யுமே, ஒருவேளை சில எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டால் என்ன செய்வது’’ என பாஜகவிடம் கேட்டுள்ளது. அதற்கு பாஜக தலைமை, ‘’தினகரன் தரப்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தொடர்ந்து அவர் மேல் பல வழக்குகள் உள்ளது. அதை வைத்து எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசுவோம். தினகரனால் ஆட்சிக்கு பாதகம் வராது. உங்களுக்குள் பங்கீட்டை விரைவில் முடித்துக்கொள்ளுங்கள்’’ என கூறியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகவே நாளை காலை எடப்பாடி பழனிச்சாமி தங்களது ஆலோசனைக்கூட்டத்தை நடத்துகிறார். நாளை மதியத்திற்கு மேல் ஓபிஎஸ் அணி ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறது. ஒருவேளை இரு தரப்பிலும் சுமூக நிலை ஏற்பட்டால் நாளை மாலை எடப்பாடியும், ஓபிஎஸ்சும் மறைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ஒன்றாக தியானம் செய்து பேட்டி அளிப்பார்கள் என்று தெரிகிறது.
- ஜீவா தங்கவேல் nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக